Suicide: சென்னை மாணவி தற்கொலைக்கு காரணம் தேர்வு முடிவு பயமா? திருமண நிச்சயமா?

[ad_1]

சென்னை: நாளை CA தேர்வு முடிவு நாளை மறுநாள் திருமண நிச்சயம் உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துக் கொண்ட செய்தி சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெரியார் முதல் குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் சகாய சேவியர் ஆல்வின். இவரது மகள் அல்லி டெலிசியா (CA) பட்டைய கணக்காளர் படிப்பு படித்து வந்துள்ளார். 

 24-வயதான அல்லி செலிசியாவுக்கு நாளை மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்தது. CA தேர்வு எழுதியிருக்கும் அல்லி செலிசியா, முதல் முறை தோல்வியுற்று தற்போது இரண்டாவது முறையாக தேர்வு எழுதியிருந்தார். சி.ஏ முடிவு நாளை வர இருந்த நிலையில் மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.

மேலும் படிக்க | மாணவி தற்கொலை: போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

நேற்று மாலை சுமார் 7 மணியளவில் பாத்ரூமிற்கு சென்ற மாணவி அல்லி, வெகு நேரமாகியும் வெளியே வராததால் அவரது தாய் மரியா ராதிகா பாத்ரூம் கதவை தட்டியுள்ளார்.

வெகுநேரமாகியும் கதவை மகள் திறக்காததால் அருகில் உள்ளவர்களை வரவழைத்து கதவை உடைத்து பார்த்தபோது, மாணவி அல்லி மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இடது கை மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டும், முகத்தை பாலிதீன் கவரால் மூடி கழுத்தில் இறுக்கி கட்டிக்கொண்டு மயங்கிய நிலையில் அல்லி செலிசியா இருந்துள்ளார். 

பின்னர் அவரை மீட்டு அருகில் உள்ள ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக தெரியவந்தது. 

மேலும் படிக்க | கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை (Police Enqyiry) மேற்கொண்டதில் டெலிசியா ஏற்கனவே (CA) பட்டைய கணக்காளர் படிப்பிற்கான தேர்வு எழுதிய நிலையில் தேல்வியடைந்தார்.

தற்போது, இரண்டாவது முறை எழுதிய சி.ஏ தேர்வின் முடிவு நாளை வரவுள்ளதும், நாளை மறுநாள் டெலிசியாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

திருமணத்திற்கு பயந்து தற்கொலை செய்துகொண்டாரா ?  இல்லை தேர்வின் முடிவு இரண்டாவது முறையும் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாளை மறுநாள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | ஐந்து வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

The Rise of Professional Recovery Care in India’s Urban Cities

Chennai, May 2026: India’s healthcare landscape is undergoing a subtle but significant transformation. While hospitals have become more advanced …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat