Rahul gandhi wants to strengthen congress party in Tamil nadu | தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும் – ராகுல் காந்தி

[ad_1]

சென்னை: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்து உரையாடினார்.

இந்தக் கூட்டத்தில், பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வபெருந்தகை, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் பல முன்னணி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். 

கே.எஸ் அழகிரி மேடைப்பேச்சு

தேசத்தை ஒருங்கிணைப்பதற்கான மாநிலங்களை மொழி வழி மாநிலமாக பிரித்தது காங்கிரஸ். அதன் காரணமாகவே தனித்தன்மையாகும் ஒற்றுமையாகவும் உள்ளது. மாநிலங்களில் ஒற்றுமைதான் இந்தியா என்பதை அற்புதமாக ராகுல்காந்தி நாடாளுமன்ற பேரவையில் எடுத்துரைத்துள்ளார் என்று அழகிரி தெரிவித்தார்.

election

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ராகுல் காந்தி பதவியை அடைய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியலில் நுழையவில்லை. ஒரு அற்புதமான புரட்சியை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ள இளைஞர் ராகுல் காந்தி. ராகுல் காந்தியின் இறுதி கருத்தே இந்திய தேசிய காங்கிரசு ஒட்டுமொத்த கருத்து என்று அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க: ’பா.ஜ.க வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ – ராகுல்காந்தி

ராகுல் காந்தி மேடைப்பேச்சு

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்திய ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு மிக முக்கியமான ஒரு மாநிலம் என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலிமை வாய்ந்த கட்சியாக அமைக்க வேண்டும் என்றால் முதலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலிமையாக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் திமுக உடன் இணைந்து பெரும் சக்தியாக வளர்ந்து வருகிறோம். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது என நம்புவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 

ஒரு அறையில் 50 காங்கிரஸ் தொண்டர்கள் இருந்தால் தமிழகத்தைப் பொருத்தவரை 500 காங்கிரஸ் தொண்டர்கள் இருப்பதற்கு சமம் என்று தமிழக காங்கிரசாரை ராகுல் காந்தி பாராட்டி பேசினார்..

மேலும் படிக்க: ’இந்த கேள்விகளுக்கு பிரதமரிடம் பதில் கிடையாது’ – ராகுல் காந்தி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Chennai Becomes the Hub of Direct Selling Dialogue as FDSA Showcases Industry Growth and Women’s Role

Chennai, April 24, 2025 — The Federation of Direct Selling Association (FDSA), in collaboration with …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat