மாண்புமிகு வேட்பாளர்- ஜனநாயக திருவிழா 2026

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் புகழ்பெற்ற அரசியல் விழாக்களை முன்மாதிரியாக கொண்டு தமிழ்நாட்டில் மாண்புமிகு வேட்பாளர் ஜனநாயக திருவிழா 2026 ஒரு நாள் விழாவாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், ஜனநாயக மாண்புகளை வலுப்படுத்துவதும் அரசியல் சித்தாந்தங்கள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதும் மற்றும் ஆரோக்கியமான அரசியல் உரையாடலுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதும் ஆகும்.

இந்த நிகழ்ச்சி ஒரு நாள் விழாவாக கொண்டாட முடிவு செய்து, அரசியல் சித்தாந்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு தலைப்புகால் விவாதங்களை நடத்த உள்ளது.

இதில் “அரசியல் சித்தாந்தமும் நம் சமூகத்திற்கு அதன் பயன்களும்” என்ற தலைப்பில் பல்வேறு சித்தாந்தங்களை கொண்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஒரே மேடையில் விவாதிக்க உள்ளனர்.

மற்றும் ஒரு விவாத மேடையில் “அரசியல் சித்தாந்தமும் அரசு துறைகளில் அதன் பங்கும் என்ற தலைப்பில் ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக கருதப்படும் நாடாளுமன்றம், அரசு துறை, நீதித்துறை மற்றும் ஜனநாயகத்தின் நான்காம் தூணாக கருதப்படும் ஊடகத்துறை. அதன் வல்லுநர்கள், முன்னாள் நீதியரசர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். மற்றும் ஊடகத்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டு உரையாட இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு தனியார் ஹோட்டலில், நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை, தொலைக் காட்சியில் புகழ்பெற்ற ஜேம்ஸ் வசந்தன் நடத்த உள்ளார் தோசிலா உமாசங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக சமூக வலைத்தளங்களில், அரசியல் கட்சி தலைவர்கள். தங்கள் சுட்சி கோட்பாடுகளை விளக்கும் காணொளிகளை பகிர்ந்துள்ளோம் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட அரசியல் சித்தாந்தம் குறித்த விழிப்புணர்வு வினா விடை காணொளிகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளோம்.

வாழ்த்தலாம் வாங்க” என்ற தலைப்பின் மூலம், தமிழ்நாட்டு வாக்காளர்கள், தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களை வாழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

About admin

Check Also

ROTARY DONATES MOBILE ORAL CANCER CARE BUS UNITTO SRI RAMACHANDRA DENTAL COLLEGE AND HOSPITAL

Chennai, 2026 The Rotary Club of Adyar in association with Fourrts India Laboratories Pvt. Ltd. …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat