மூவி வுட் தளத்தில் நாளை பொங்கல் பண்டிகையில் வெளியாகும் ‘லேபர்’ திரைப்படம்

இன்றைய சூழலில் பலரும் நல்ல படைப்புகளை உருவாக்கிவிட்டு அதேசமயம் சிறிய படம் என்பதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய அளவில் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருப்பது ஓடிடி தளங்கள் தான். அவற்றில் கூட பல தளங்கள் தற்போது படங்களை வாங்குவதில் பாரபட்சம் காட்டிவரும் நிலையில் மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்’கை’ கொடுத்து வருகிறது. 

மூவி வுட் (Movie Wood) ஒடிடி தளம் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியாகும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தங்களது தளத்தில் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக நாளை (ஜன-15) முதல் ‘லேபர்’, குற்றநிலை மற்றும் பீச்சாங்கை கார்த்தி நடித்துள்ள ‘குருடன்’ ஆகிய திரைப்படங்களை மூவி வுட் தளம் வெளியிடுகிறது. 

ராயல் பார்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லேபர்’ படத்தை அறிமுக இயக்குனர் சத்தியபதி இயக்கியுள்ளார். 

முத்து, சரண்யா ரவிச்சந்திரன், ஆறுமுக முருகன், திருநங்கை ஜீவா சுப்பிரமணியன், கயல்விழி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படத்தொகுப்பை கணேஷ்குமார் மேற்கொள்ள, நிகில் தினகரன் இசையமைத்துள்ளார்.

இது தமிழகத்தில் வாழும் கட்டிட தொழிலாளர்கள் வாழ்வியலை மையப்படுத்தி எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ள படம் ஆகும். இந்தப் படத்திற்கு 13 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளன. 

கட்டிட தொழிலாளர்களை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் படமாக இருக்கும். அதுமட்டுமல்ல, அதிக குளோசப் காட்சிகள் இல்லாமல் தமிழ் சினிமாவில் வாழ்வியலை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

பிரபல கேரள திரைப்பட இயக்குனரும் எழுத்தாளருமான அடூர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊமை விழிகள் இயக்குனர் அரவிந்தராஜ் ஆகியோர் இந்த படத்தை பார்த்து பாராட்டி உள்ளனர்.

பிரபலமான IMDB இணையதளம் இந்த படத்திற்கு 9.8/10 மற்றும் 5 / 5 என்கிற ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளது இந்த படத்திற்கு கூடுதல் பலம்.

மூவி வுட் தளத்தில் ஆண்டு சந்தா 99 ரூபாய் செலுத்தினால் வருடம் முழுதும் பல படங்களை பார்த்துக் கொள்ளலாம். ஒரு முறை படம் பார்க்க வேண்டும் என்றால் 40 ரூபாய் செலுத்தி பார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

About admin

Check Also

Anirudh Ravichander Launches Albuquerque Records, Marking a Bold Step Into Artist-Owned Music

Chennai – February 2026: After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat