நிலை மறந்தவன் திரைப்பட விமர்சனம்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் உருவான படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா நசீம் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு போலி கும்பல் படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது.

கிருஸ்தவ மத போதகர்கள் மற்றும் கிருஸ்தவ மத வியாபாரிகளை சாட்டை கொண்டு அடிக்கும் படம். இப்படத்தை உருவாக்க நினைத்த தைரியத்தை பாராட்ட வேண்டும்.

ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான படம். பகத் பாசில் நடிப்பு அபாரம், நசிரியா இளமை, கௌதம் மேனன் ஸ்டைல் சூப்பர்.7 முக்கிய கதாப்பாதிரம் கொண்டு சிறப்பான வெற்றி படம் கொடுத்துள்ளது.

About admin

Check Also

Anirudh Ravichander Launches Albuquerque Records, Marking a Bold Step Into Artist-Owned Music

Chennai – February 2026: After more than a decade of reshaping Indian film music with award-winning background scores, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat