[ad_1]
இன்று எவ்வளவு தான் ஸ்மார்ட்போன்கள் வந்தாலும், பலரின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்வது என்னவோ தொலைக்காட்சிகள் தான். அப்படி நாம் வாங்கக்கூடிய தொலைக்காட்சிகளிலும் சில பல வழிமுறைகள் உள்ளது, எதையும் கவனிக்காமல் டிவிகளை வாங்கிவிட முடியாது. பல விஷயங்களை கருத்தில் வைத்து தான் டிவி வாங்க வேண்டும். சரியான அளவை கண்டறிந்து டிவி வாங்குவது முதல் படியாகும், சில சமயங்களில் நீங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ டிவி இருந்துவிடலாம். ஆனால் உங்கள் அறைக்கு எந்த அளவிலான டிவி பொருத்தமாக இருக்கும் என்பதை தெளிவாக தெரிந்த பின்னரே நீங்கள் அதனை வாங்க வேண்டும். ஓரளவு பெரிய அறையில் 55 இன்ச் முதல் 65 இன்ச் வரையிலான டிவிகளை பொருத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | மொபைலில் தேவையில்லாத நோடிபிகேஷன்களை ஆப் செய்வது எப்படி?
ஓஎல்இடி டிவிகள் விலையுயர்வானதாக உள்ளது, அதேசமயம் இது சிறந்த அனுபவத்தை தருகிறது, அதேபோல கியூஎல்இடி டிவிகளும் விலை மிகுதியானவை தான், இதுவும் சிறந்த தரத்தில் உள்ளது. பட்ஜெட் தொகையில் வாங்க நினைப்பவர்களுக்கு உகந்தது எல்இடி அல்லது எல்சிடி டிவிகள் தான், இரண்டு வகையான எல்சிடி பேனல்கள் உள்ளன. எட்ஜ் பேனல்கள் கொண்ட டிவிகளை வாங்காமல் தவிர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது. சந்தையில் உள்ள 8கே டிவிகள் போதுமான வசதிகளை கொண்டிருப்பதாக தெரியவில்லை, அதனால் நீங்கள் ஹெச்டி மற்றும் 4கே விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ஹெச்டி டிவிகள் 1920×1080 பிக்சலையும், 4கே டிவிகள் 3840×2160 பிக்சல்களையும் கொண்டுள்ளது. 4கே டிவிகள், ஹெச்டி டிவிகளை விட நான்கு மடங்கு அதிகமான பிக்சல்களையும் கொண்டுள்ளது.
டிவிக்கு முக்கியமாக ஹெச்டிஎம்ஐ மற்றும் யூஎஸ்பி போர்ட் தேவை, ஹெச்டிஎம்ஐ 4.1க்கு பதிலாக ஹெச்டிஎம்ஐ 2.0 அல்லது ஹெச்டிஎம்ஐ 2.1 டிவியை தேர்வு செய்யலாம். டால்பின் விஷன் கொண்ட டிவிகள் சிறந்த பார்வை தரத்தை வழங்குகின்றன. டிவிக்கு மேலும் முக்கியமானது சிறந்த ஒலி, ஒளி இல்லாமல் படம் பார்ப்பது சிறந்ததல்ல. டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ் போன்ற ஸ்பீக்கர்களுக்கு பதிலாக நல்ல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்ட டிவியை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகும். ஸ்மார்ட் டிவியில் மூன்று முக்கியமான தளங்கள் உள்ளது, அதாவது ஆண்ட்ராய்டு டிவி, டைசெனோஸ் மற்றும் வெபோஸ் ஆகியன. இந்த மூன்றில் ஆண்ட்ராய்டு டிவி சிறந்ததாக கருதப்படுகிறது.
மேலும் படிக்க | Free 4G Jiophone: இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ‘ஜியோ போன்’ இலவசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
[ad_2]
Source link