TANUVAS Veterinary students counseling ranking | கால்நடை மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு

[ad_1]

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை தொழில்நுட்ப படிப்புகளுக்கான  தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் தரவரிசையில் முன்னிலை இடங்களில் இடம் பிடித்து சாதனை செய்துள்ளனர்.

பொது மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை தொடர்பான கலந்தாய்விற்கு பிறகே,கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுகள் நடத்தப்படும் என்று, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடை மருத்துவப் படிப்பான BVSC மற்றும் கால்நடை தொழில் நுட்ப படிப்பான B.tech ஆகிய இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் இன்று (2022, பிப்ரவரி 2) வெளியிட்டார்.

ALSO READ | எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

அதற்குப் பிறகுக் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு தமிழகத்தில் மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

எனவே, இந்த ஆண்டு காலநடை மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதலாக 120 இடங்கள்  கிடைத்துள்ளதாக உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்காக, இந்த ஆண்டு மொத்தம் 15 ,580 விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டன. அவற்றில் 13,901 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த விவரங்கள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக இணையத்தில் வெளியிடப்படும்.

ALSO READ | நீட் தேர்வில் இருந்து விலக்கு தொடர்பாக பாஜக தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Tamil Nadu Veterinary and Animal Sciences University – TANUVAS), 1989 இல் இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து பிரிந்து தனி பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது. 

councelling

சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம், முதலில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம், தூத்துக்குடி ஆகியவற்றை இணைத்து துவக்கப்பட்டது.

2012ம் ஆண்டில், தூத்துக்குடியிலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆய்வு மையம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துடன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டது.

ALSO READ | நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க தமிழக அரசு முடிவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Provoke Art Festival 2024: Where Elegance Met Art Chennai’s Biggest Art Festival Returned for Its Second Year

Provoke Art Festival 2024, presented by Orangewood, held on November 2nd 2024 at Music Academy, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat