old woman raped and killed at Thirunindravur | மனநிலை பிறழ்ந்த மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டுகொலை!

[ad_1]

திருநின்றவூரில் 55 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருநின்றவூர், கிருஷ்ணாபுரம், முதல் தெருவில் கட்டுமானத்திலிருந்த ஒரு வீட்டில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மர்மமான முறையில் கிடந்தார்.

பச்சையப்பன் என்பவர் புதியதாக கட்டி வரும் அந்த வீட்டில், நேற்று முன்தினம் அலங்கோலமாக ஆடைகள் இருந்த நிலையில் மூதாட்டி இருந்தது கண்டறியப்பட்டது.

உடனே, கட்டிட தொழிலாளிகள் பச்சையப்பனுக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார், சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், மர்மமான முறையில் இறந்து கிடந்தது, திருநின்றவூர், நத்தம்பேடு, அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர் அழகேசன் என்பவரின் மனைவி பாக்கியலட்சுமி (55) என்பது தெரியவந்தது.

மனநிலை பாதிக்கப்பட்ட பாக்கியலட்சுமிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாக்கியலட்சுமி தினமும் வீட்டை விட்டு வெளியே சென்று சுற்றி விட்டு இரவு வீடு திரும்புவது வழக்கம்.

ஆனால், கடந்த 30ந்தேதி இரவு பாக்கியலட்சுமி வீட்டிற்கு வரவில்லை இதனையடுத்து உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். ஆனால், தகவல் எதுவும் தெரியவில்லை என்று கவலைப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பாக்கியலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. பாக்கியல்ட்சுமியின் இறப்பில் போலீசாருக்கு சந்தேகமும் ஏற்பட்டதை அடுத்து, போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதி உள்ள கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தபோது கொலை விவகாரத்தில் துப்புக் கிடைத்தது.

திருநின்றவூர், நடுக்குத்தகை, பாடசாலை தெருவை சேர்ந்த சக்திவேல் (32) என்ற குப்பை பொறுக்கும் கூலித்தொழிலாளி, பாக்கியலட்சுமியை அழைத்து சென்றது அப்பகுதியில் உள்ள கேமராவில் தெரியவந்தது.

இதனையடுத்து, இன்று போலீசார் தலைமறைவாக சக்திவேலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பாக்கியலட்சுமியை பச்சையப்பன் வீட்டுக்கு சக்திவேல் அழைத்து சென்றதையும், அவரை பலாத்காரம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

வலுக்கட்டாயமாக உறவு கொண்ட பிறகு, பாக்கியலட்சுமியின் தலையை சுவற்றில் மோதி அடித்து கொலை செய்ததாக சக்திவேல் தெரிவித்தார்.
இதனையடுத்து, சக்திவேலை கைது செய்த போலீசார், அவர் மீது போலீசார் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவர் வேறு ஏதேனும் குற்ற செயலில் ஈடுப்பட்டு உள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்து படுகொலை செய்த சம்பவம் திருநின்றவூரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

About

Check Also

Amrita Vishwa Vidyapeetham Hosts Workshop on Cultural Ecology of Environment and Climate Change

Chennai, December, 2024: Amrita Vishwa Vidyapeetham recently organized a workshop on “Cultural Ecology of Environment and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat