[ad_1]
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பல சிறந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும்.
இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 778ஜி + செயலியில் வேலை செய்கிறது. இது 8ஜிபி ரேம் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது பவர் பேக்அப்பிற்கான வலுவான பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
மோட்டோரோலா எட்ஜ் 30: விலை மற்றும் கிடைக்கும் தன்மை
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு வகைகளில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் 6ஜிபி + 128ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.27,999. 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ 29,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அரோரா கிரீன் மற்றும் மீடியோர் கிரே வண்ண வகைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.
பிளிப்கார்ட், ரிலயன்ஸ் டிஜிட்டல் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் இந்த போனை வாங்கலாம். இதன் விற்பனை மே 19ஆம் தேதி தொடங்கும். இந்த ஸ்மார்ட்போனை வாங்க எஹ்டிஎஃப்சி வங்கி-யின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும்.
மோட்டோரோலா எட்ஜ் 30: விவரக்குறிப்புகள்
மோட்டோரோலா எட்ஜ் 30 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலானது. இது 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.7-இன்ச் பிஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 144Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் எச்டிஆர்10+ ஆதரவுடன் வருகிறது.
மேல்ம் படிக்க | இந்த செயலிகள் இனி பிளே ஸ்டோரில் இருக்காது – கூகுள் அதிரடி
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி+ செயலி பொருத்தப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளுக்கு அட்ரினோ 642எல் ஜிபியு கொடுக்கப்பட்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் புகைப்படம் எடுப்பதற்கு மூன்று பின்புற கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சென்சார் 50எம்பி-க்கானது. 50எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளன. வீடியோ அழைப்பு மற்றும் செல்ஃபிக்காக போனில் 32எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இதில் 8 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி உள் சேமிப்பு உள்ளது.
பவர் பேக்கப்பிற்காக, பயனர்களுக்கு 33வாட் டர்போபவர் சார்ஜிங் ஆதரவுடன் 4,020எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 32.1 மணிநேரம் பேக்அப்பை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | நாளை மோட்டோரோலா எட்ஜ் 30 வெளியீடு; இன்று முக்கிய அம்சங்கள் கசிந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
[ad_2]
Source link