Hi 5 திரைப்பட இசை வெளியீட்டு விழா !!! 

Basket Films & Creations  தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குனர் பாஸ்கி T ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம்  “Hi 5” . விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…

டிரெய்லர் பார்க்கும் போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக்குழுவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது…
இந்தப்படம் அன்பைப்பற்றிய படமாக தெரிகிறது. நல்ல எண்ணங்களால் வாழ்பவர்களே  நீண்ட காலம் வாழ்கிறார்கள், மறைந்தும் வாழ்கிறார்கள். அதே போல் நல்ல எண்ணங்களால் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இந்தப்படத்தில் கிராமமும் இருக்கிறது, நகரமும் இருக்கிறது. இப்படம் வயதானவர்களின் வலியை சொல்கிறது. இன்று உலகம் முழுக்கவே வயதானவர்களை பார்த்து கொள்ள  ஆளில்லை என்ற பிரச்சனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படம் அதைப்பற்றி பேசுவது மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்.

பாடகர் கானா பாலா பேசியதாவது 
ஒரு பாடகரான என்னை மேடைக்கு அழைத்ததற்கு நன்றி. படத்தை நன்றாக எடுத்துள்ளார்கள்.  பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தை சிறப்பாக உருவாக்கிய குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.  தந்தைக்கும் மகனுக்குமான கதை. அனைவருக்கும் பிடிக்கும் எல்லோருக்கும் நன்றி. 

தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
இந்த மேடை அழகாக இருக்கிறது. ஒரு காலத்தில் உறவுகளை போற்றியது தமிழ்நாடு. இப்போது ஒரே வீட்டில் ஆளுக்கொரு ரூமில் இருக்கிறார்கள் வயதனாவர்களை யாரும் கவனிப்பதில்லை. அந்த வலியை இந்த சினிமா சொல்கிறது. வாழ்த்துக்கள். வாரிசு படம் தெலுங்கில் தியேட்டர் கிடைக்க வில்லை என கவலைப்படுகிறார்கள். தெலுங்கில் கிடைக்காவிட்டால் உனக்கென்ன கவலை. இங்கே லட்சக்கனக்கில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் இங்கேயா அந்தப்படத்தை எடுத்தார்கள். இங்கே இந்த மாதிரி சின்ன படம் தான் ஓட வேண்டும். நல்ல கதையை சொல்லும் இந்தப்படம் ஓட வேண்டும்.  இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

தயாரிப்பாளர் இயக்குநர் பாஸ்கி T ராஜ் பேசியதாவது…
இப்படம் எடுப்பதற்கு உதவிய அனைத்து கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் இங்கு வந்து எங்களை வாழ்த்திய பிரபலங்களுக்கும் நன்றி. முதியவர்கள் இரண்டாம் குழந்தைப்பருவத்தில் இருப்பவர்கள் ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை புரிந்து கொள்வதில்லை. முதியவர்களை புரிந்து கொள்ள சொல்வது தான் இந்தப்படம். சிறுவர்களின் பார்வையில் இப்படத்தை சொல்லியுள்ளோம்.  படத்தை பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 

ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது… 
நம் நாட்டில் ஆயிரம் வருடம் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஒழுக்கம் என்பது மிக முக்கியம். ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் 100 ஆண்டுகள் கடந்தும் வாழலாம். மதுப்பழக்கம் இல்லாமல் வாழுங்கள். இந்தப்படம் ஒரு முதியவரின் சொத்தை அடைவதற்காக அவரது பிள்ளைகள் ஏமாற்றும் கதையை சொல்கிறது. இந்த நிலை உலகம் முழுக்க இருக்கிறது. பெற்ற அம்மா அப்பாவை போற்ற வேண்டும். அம்மா அப்பாவை வணங்குபவன் தான் வாழ்வில் ஜெயிக்க முடியும்.  இந்த Hi 5 படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். 

இயக்குநர் பேரரசு பேசியதாவது…
சினிமாவில் இளைஞர்களை காட்டி வெற்றி அடைவது எளிதானது ஆனால் வயதானவர்களை காட்டி வெற்றி அடைவது கஷ்டம் ஆனால் அதில் நீங்கள் சாதிப்பீர்கள். முதுமைக்காலம் தான் நம் வாழ்வில் முக்கியமானது நாம் அந்த காலகட்டத்தில் தான் நமக்கு பிடித்ததை செய்ய ஆணைப்பட்டு வாழுகிறோம்.  முதுமை காலத்தின் வலிகளை சொல்லும் படத்தை தரும் இந்த படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.

About admin

Check Also

Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 Lakh.

‘Uzhavar Virudhugal 2025’ (Farmers Awards 2025) – An initiative by Uzhavan Foundation to honour and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat