சென்னை, ஜூலை 31, 2024: நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கும் யுனைட்டட் நேஷன்ஸ் குளோபல் காம்பாக்ட் அமைப்பின் இந்திய கிளையாக யுஎன் குளோபல் காம்பாக்ட்நெட்வொர்க் இந்தியா (UN GCNI) செயல்படுகிறது, இலாபநோக்கற்ற சங்கமான இது, இந்தியாவின் முன்னணி பிசினஸ் பெருநிறுவனங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ் குழுமத்துடன்ஒருங்கிணைந்து, இயற்கை மறுசீரமைப்பில் பிசினஸ் தலைமைத்துவத்திற்கான மையத்தை இன்று சென்னைமாநகரில் தொடங்கியிருக்கிறது. உயிரினப் பன்மிய வளங்காப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முறை நிபுணர்கள் பெரிய பிசினஸ் நிறுவனங்கள், அவை பிரதிநிதிகள், பள்ளிகள், சிந்தனை மையங்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இம்மையத்தின் தொடக்க நிகழ்வான பயிலரங்கில் பங்கேற்றன. UN GCNI ஆல் உருவாக்கப்பட்டுள்ள இயற்கைமறுசீரமைப்புக்கான பிசினஸ் தலைமைத்துவ மையம், உயிரினப்பன்மிய பாதுகாப்பில் தனியார் துறையின் ஈடுபாடுகளைகணிசமாக ஆழப்படுத்துவதையும் மற்றும் நிலைமாற்றத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடிமுயற்சியாகும். தொலைநோக்கு பார்வைகொண்ட பிசினஸ் தலைவர்கள் மற்றும் தேசிய உயிரினப் பன்மிய ஆணையம்மற்றும் மாநில உயிரினப் பன்மிய வாரியங்கள் போன்ற அரசுநிறுவனங்களின் தீவிர ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலம்,உயிரினப் பன்மியத்தை பேணி வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், கண்காணிப்பையும் மற்றும் தகவலளிப்பு செயல்பாடுகளையும் …
Read More »