Bike Maintenance: Mileage Increasing Tips | பைக்கில் அதிக மைலேஜ் வேண்டுமா? இந்த டிப்ஸ் உதவும், பணமும் பெட்ரோலும் மிச்சமாகும்

[ad_1]

மோட்டார் சைக்கிள்கள் அலுவலகம் அல்லது பிற இடங்களுக்குச் செல்வதற்கு வசதியான மற்றும் மலிவான வாகனங்களாக கருதப்படுகின்றன. இவை குறைந்த செலவில் நல்ல மைலேஜ் தருகின்றன.

ஆனால் பெரும்பாலும் சிறந்த மைலேஜ் பைக்கை வாங்கிய பிறகும், தங்கள் பைக் அதிக மைலேஜ் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பலருக்கு இருக்கும். மைலேஜ் நன்றாக இல்லை என்றால், அதன் காரணமாக பெட்ரோல் செலவு அதிகரிக்கிறது. இது உங்கள் பாக்கெட்டை நேரடியாக பாதிக்கிறது.

உங்கள் பைக்கின் மைலேஜைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், பைக்கின் மைலேஜை அதிகரிக்க எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள உதவிக்குறிப்புகளின் முழு விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

பைக் மைலேஜை அதிகரிப்பதற்கான உதவிக்குறிப்புகள்:

– பைக்கின் டயரில் அழுத்தம் சரியாக இருக்க வேண்டும். உங்கள் பைக்கின் டயரில் காற்றழுத்தம் (ஏர் பிரஷர்) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது உங்கள் பைக்கின் மைலேஜை நேரடியாக பாதிக்கிறது, எனவே நீங்கள் பெட்ரோல் பம்பில் பெட்ரோலை நிரப்ப செல்லும்போதெல்லாம், உங்கள் பைக் டயர்களின் காற்றழுத்தத்தை சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான பைக்குகளை வாங்கணுமா? சிறந்த பைக்குகளின் பட்டியல் இதோ 

– மக்கள் தங்கள் அலுவலக பணிகளிலோ அல்லது பிற வேலையிலோ மிகவும் பிஸியாகி விடுவதால், நீண்ட காலத்திற்கு பைக்கை சர்வீஸ் செய்ய முடியாமல் போவதை அடிக்கடி காணலாம்.

சரியான நேரத்தில் பைக்கை சர்வீஸ் செய்யவில்லை என்றால், பைக்கின் மைலேஜை அது பாதிக்கும். எனவே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நல்ல மெக்கானிக்கைக் கொண்டு பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்.

– பைக் ஓட்டும் போது, ​​எந்த வேகத்தில், எந்த நேரத்தில் கியரை மாற்ற வேண்டும் என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. இதன் காரணமாகவும் பைக்கின் மைலேஜ் பாதிக்கப்படுகிறது.

பைக்கை ஓட்டும் போது முதல் கியரை போட்டு குறைந்தது 100 மீட்டர் சென்ற பின்னரே கியரை மாற்ற வேண்டும். அதன் பிறகு, வேகத்திற்கு ஏற்ப கியரை மாற்றலாம். மீண்டும் பைக்கை ஸ்டார்ட் செய்யும் போது முதல் கியரிலேயே இயக்குங்கள். இதனால், உங்கள் பைக்கின் மைலேஜ் அதிகரிக்கும். 

புதிய பைக் வாங்கிய சில நாட்களுக்கு அனைவரும் தினமும் பைக்கை சுத்தம் செய்வதுண்டு. ஆனால், சில நாட்களில் சுத்தம் செய்யும் செயல்முறை வாரம் ஒரு முறை, மாதம் ஒரு முறை என ஆகிவிடுகிறது. இது முற்றிலும் தவறான பழக்கம்.

தினமும் பைக்கை ஓட்டினால், அதன் உட்புறம் மற்றும் பிற முக்கிய பாகங்களில் தடிமனான தூசி படியாமல் இருக்க, தினமும் அதை சுத்தம் செய்யுங்கள். இது உங்கள் பைக்கின் காற்று வடிகட்டி நன்றாக வேலை செய்ய உதவும். இது மைலேஜை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும்.

– பைக் ஓட்டும் போது, சிக்னலில் ​​சிவப்பு விளக்கு எரியும் போதும், ​​சிலர் பைக்கின் இன்ஜினை அணைக்க மாட்டார்கள். இதனால் பைக்கின் இன்ஜின் வேலையின்றி நீண்ட நேரம் இயங்குகிறது. இதனால் அதிக எண்ணெய் வீணாகிறது.

ஆகையால், நீங்கள் சிக்னலில் நிறுத்தும் போதெல்லாம், உங்கள் பைக்கின் இஞ்சினை அணைக்கவும். இதனால் உங்கள் எண்ணெய் நுகர்வு குறைக்கப்படும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றினால், உங்கள் பைக் முன்பை விட அதிக மைலேஜ் தருவது மட்டுமின்றி ஓட்டுவதற்கு வசதியாகவும் மாறியிருப்பதை காணலாம்.

மேலும் படிக்க | 83 கி.மீ வரை மைலேஜ் கொடுக்கும் 4 பைக்குகள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Maruti Suzuki Offering Amazing Discount in July 2022: Details Here | Cheapest Cars: ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ

[ad_1] மாருதி கார்களுக்கான தள்ளுபடிகள் ஜூலை 2022: மாருதி சுசுகி இந்த மாதம் (ஜூலை 2022) அதன் அரேனா ரேஞ்ச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat