Amazon Fab Phones Fest: Buy Redmi Note 10T 5G for just Rs. 600 | அமேசானில் நம்ப முடியாத தள்ளுபடி: Redmi Note 10T 5G-ஐ வெறும் ரூ. 600-க்கு வாங்கலாம்

[ad_1]

அமேசான் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் ரெட்மி நோட் 10டி 5ஜி சலுகை: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் நடந்து வருகிறது. இதில் நீங்கள் விரும்பும் பிராண்டின் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவாகப் பெறலாம். மே 24ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனையின் கடைசி நாள் இன்று. இந்த விற்பனையின் மூலம் ரெட்மி நோட் 10டி 5ஜியை ரூ.17 ஆயிரத்துக்கு பதிலாக வெறும் ரூ.600க்கு வாங்கலாம். இந்தச் சலுகையைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம். 

ரெட்மி நோட் 10டி 5ஜி-இல் பெரும் தள்ளுபடியைப் பெறுங்கள்
அமேசானில் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் விற்பனை நடந்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த விற்பனையின் மூலம், வாடைக்கையாளர்கள் ரெட்மி நோட் 10டி 5ஜி-ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். 

இந்த போன் பிளிப்கார்டில்-ல் ரூ.16,999க்கு பதிலாக ரூ.11,999க்கு விற்கப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, இந்த போனில் ரூ.1250 தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் உங்கள் போனின் விலை ரூ.10,749 ஆக குறையும். 

மேலும் படிக்க | 48 மணி நேரம்.. குறைந்த விலையில் புது இயர்பட்ஸ் அறிமுகப்படுத்திய ட்ரூக்! 

எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ஏகப்பட்ட தள்ளுபடி 
ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.599க்கு எப்படி வாங்குவது என்பதை தற்போது பார்க்கலாம். வங்கிச் சலுகைக்குப் பிறகு, ரூ.10,749க்குக் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை பழைய ஸ்மார்ட்போனுக்குப் பதிலாக வாங்கினால், அதாவது பரிமாற்ற சலுகையில் வாங்கினால், அதன் விலை ரூ.10,150க்கும் குறைவாகவே இருக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் வாடிக்கையாளர்கள் பெற்றால்,  உங்களுக்கான ரெட்மி நோட் 10டி 5ஜி-யின் விலை ரூ.599 ஆக குறைந்துவிடும்.

ரெட்மி நோட் 10டி 5ஜி: அம்சங்கள்

ரெட்மி நோட் 10டி 5ஜி- இல், 6.5 இன்ச் எஃப்எஹ்டி + ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதம் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 18வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.  மேலும் இதில் மீடியாடெக் டைமென்சிடி 700 செயலி கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10டி 5ஜியில், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வழங்கப்படுகிறது. 

கேமராவைப் பற்றி பேசுகையில், ரெட்மி நோட் 10டி 5ஜி-இல் 48எம்பி பிரதான சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2எம்பி டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 8எம்பி முன்பக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Laptop Battery Life: அடடே லேப்டாப்பின் பேட்டரி ஆயுளை அதிகரிப்பது இவ்வளவு சுலபமா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Maruti Suzuki Offering Amazing Discount in July 2022: Details Here | Cheapest Cars: ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ

[ad_1] மாருதி கார்களுக்கான தள்ளுபடிகள் ஜூலை 2022: மாருதி சுசுகி இந்த மாதம் (ஜூலை 2022) அதன் அரேனா ரேஞ்ச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat