[ad_1]
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
சென்னை இன்று இரவு 8.10 மணியளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது, முன்னாள் அமைச்சர் உணவருந்தி கொண்டிருந்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலையப் பகுதிகளில் ஏராளமான அதிமுகவினர் குவிந்த நிலையில் போலிஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளனர்.
Chennai Police arrest AIADMK leader D Jayakumar on charges of attacking a DMK cadre at a polling booth on urban local body poll voting day (Saturday). Jayakumar & and 40 other AIADMK cadres were earlier booked under 8 sections pertaining to rioting & assault
(file pic) pic.twitter.com/lRSKoAfxEM
— ANI (@ANI) February 21, 2022
நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட வந்தவரை கையும் களவுமாக பிடித்தாக கூறி சிலர் அடித்தனர்.
மேலும் படிக்க | தாம்பரம் 40வது வார்டில் 3 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது
பிடிக்கப்பட்ட நபரின் சட்டையை கழற்றி அவரை அரை நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். அந்த இடத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இருந்தார். இந்த வீடியோ வெளியாகி அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளான நபர் திமுக தொண்டர் என்பது தெரிய வந்ததும், அரசியல் வட்டாரங்களில் சூடு அதிகரித்தது.
இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தாக்குதல், கலகம் செய்ய தூண்டுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு
அதேபோல், ஜெயக்குமார் கார் ஓட்டுநர் ஜெகன்நாதன் அளித்த புகாரின்பேரில் திமுக தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டினப்பாக்கம் வீட்டிலிருந்த ஜெயக்குமாரை போலீஸார் கைது செய்தனர்.
திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு… இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே…” என்று ஜெயக்குமார் டுவிட்டரில் செய்தியும் பதிவிட்டிருந்தார்.
கள்ள ஓட்டு போட்ட திமுககாரங்களை பிடிச்சு கொடுத்ததற்கு என்மீதே வழக்கா..?
திமுககாரர்கள் கள்ள ஓட்டு போட்டதை பார்த்த, வாக்குச்சாவடி மைய அலுவலரின் வாக்குமூலமே இதற்கு சாட்சியாக இருக்கு…
இதுக்கு என்ன சொல்லப்போறீங்க முதல்வர் அவர்களே… pic.twitter.com/ZJAiKTrV1j
— DJayakumar (@offiofDJ) February 21, 2022
ஜெயக்குமார் கைது ஓ பி எஸ் ,இ பி எஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஹிஜாப் சர்ச்சை: 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
[ad_2]
Source link