மார்கழி நிறைவு நாளில் 150 குழந்தைகள் கிருஷ்ணர் ஆண்டாள் வேடம் அணிந்து நான்கு மாட வீதி உலா

மார்கழி நிறைவு நாளில் 150 குழந்தைகள் கிருஷ்ணர் ஆண்டாள் வேடம் அணிந்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே என பகவானை வேண்டி நான்கு மாட வீதி உலா நடைபெற்றது.

மார்கழி நிறைவு நாளான 14.1.2026 புதன்கிழமை காலை 6 மணி முதல் 7 15 மணி வரை சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலை அயோத்தியா மண்டபத்தில் இருந்து நான்கு மாட வீதிகளில் சுமார் 150 குழந்தைகள் கிருஷ்ணர் ஆண்டாள் வேடமனிந்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பகவாணை வேண்டி பஜனை பாடல் பாடி வீதி உலா நடைபெற்றது.

மேலும் இந்த வைபவம் பகவன் நாம பிரச்சார மண்டலினி, ஸ்ரீ ஸ்ரீவாஞ்சியம் சாரிடேபிள் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீராம் சமாஜ் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த பொருளாளர் விஸ்வநாதன் அவர்கள் கூறியது மாதத்தில் சிறந்த மாதமான மார்கழி மாதம் இந்த மாதத்தில் பகவான் கிருஷ்ணர் பெருமான் ஆண்டாளை வணங்கி நாம் அனைவரும் இந்த நாளை சுபிட்சமாக வணங்க வேண்டும் மார்கழி கடைசி நாளான இன்று சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டு பகவான் கிருஷ்ணர் ஆண்டாள் வேடம அணிந்து அயோத்தியா மண்டபம் நான்கு மாட வீதியில் பஜனை பாடல் பாடிக்கொண்டு வளம் வந்தனர் தொடர்ந்து சிறு குழந்தைகள் இருந்து ஆண்டவனை பிரார்த்தனை செய்து அவர் பல நல்ல விஷயங்களை அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு இந்த நாள் நமக்கு பொன்னான நாளாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. ஆண்டவன் கிருஷ்ணன் அருளால் ஆண்டாள் அருளால் குருமார்கள் அருளால் நாம் அனைவரும் பகவானை வணங்கி நாம் எப்போதும் அதனை பின்பற்ற வேண்டும். நம்முடைய முன்னோர்கள் கற்று கொடுத்ததை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் பகவானுடைய அனுகிரகம் நமக்கு எப்போதும் நன்மையே உண்டாக்கும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட 150 குழந்தைகளுக்கும் ஸ்கூல் பேக், டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில், பிரசாதம் வழங்கி குழந்தைகளை கௌரவத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் BNPM சார்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மேனேஜிங் டிரஸ்ட் திரு சுவாமிநாதன், திரு கடலூர் ஸ்ரீ கோபி பாகவதர், செயலாளர் திரு சங்கர், பொருளாளர் திரு விஸ்வநாதன் மற்றும் குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ வாஞ்சியம் முரளி பாகவதர், ஸ்ரீ டி எஸ் ராஜகோபால், ஸ்ரீ சங்கரன் மற்றும் ஸ்ரீராம் சமாஜ் தலைவர் மற்றும் செயலாளர் திரு ராமன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மிக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்தனர். மேலும் இந்த நிகழ்வில் டிரஸ்டின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் பெற்றோர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

About admin

Check Also

SRILA CHATTERJEE BRINGS AFFORDABLE ART TO CHENNAI

Dates: 6th to 8th March Time: 11 am – 7 pm Venue: The Folly at …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat