சென்னை, ஏப்ரல் 19:
இந்திய சுயராஜ்ய கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் தலைவர் ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில்
நிறுவனர் & தலைவர் ராம்குமார் கூறுகையில்:
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு ஆளுநர் பதவி என்பது தேவையற்றது. காலம் காலமாக ஒன்றியத்தில் எந்த ஆட்சி வருகின்றதோ யாருடைய ஆட்சி கைக்கு வருகின்றபோது அவர்களின் கைப்பாவையாக அவர்கள் ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஆட்சியைப் பிடிக்க பார்க்கின்றனர் அல்லது எல்லா விதத்திலும் இடைஞ்சல்களை தருகின்றனர். மாநிலத்திற்கு கவர்னர்கள் என்பதே தேவையற்றதாகின்றது. மாநில அரசின் ஆட்சியை கண்காணிக்க ஜனாதிபதி உள்ளார். மாநிலத்திற்கு ஒத்திசைவாகவும் உதவியாகவும் இருக்க வேண்டிய ஆளுநர், மாறாக பெரும் தலைவலியாக இருந்துள்ளார் என்பதே வரலாறு. மத்தியில் ஆளாத அரசு மாநிலத்திற்கு எதிராக ஆளுநர் மூலம் எதிர்க்கட்சித் தலைவரை விட மிக மிக மோசமான துரோகியாக செயல்பட வைக்கிறது. மிக முக்கியமாக ஆளுநர்களுக்கு என்று மாநிலத்தில் எந்த அதிகாரமும் இல்லாத போது எதற்காக கவர்னர் பதவி என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஆளுநர் பதவியை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
நடிகர் விஜய், அரசியலில் திடீர் எம்ஜிஆர் ஆக முயற்சிக்கிறார். தங்க ஸ்பூனால் சாப்பிட்டு எப்போதும் ஏசியில் இருந்து வளர்ந்தவரால் எப்படி ஏழை மக்களின் துயர் துடைக்க பொது வாழ்வில் ஈடுபட முடியும். இதுவரையில் பொதுவெளியில் வந்து அவர் எந்த ஒரு போராட்டமும் பேரணியோ ஊர்வலமோ மறியலோ நடத்தியதே இல்லை. நேரடியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இதுவரையில் நடந்தது இல்லை.
முதலாளித்துவ அடிப்படையில் விஜய் செயல்படுகின்றார்.
என்று கூறினார்.