(25.02.2025) அதிகாலை முன்பகை காரணமாக தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இராயப்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்த 10 நபர்களை தனிப்படை புலனுடன் இராயப்பேட்டை சரக காவல் உதவி ஆணையாளர் N.இளங்கோவன் தலைமையிலான காவல் குழுவினர் கைது செய்து அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுத்து அவர்களிடமிருந்து 5 பட்டா கத்திகள், 5 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், 5 லைட்டர்கள், 6 செல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறப்பாக பணி செய்துள்ளமைக்காகவும், 08.02.2019 சென்னை பெருநகர காவல், தி.நகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக புகாரின் பேரில் W-26 அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (W-26 AWPS) போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, அப்போதைய W-26 அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.C.கலா, 19 வயது (2019ம் ஆண்டு) எதிரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தும், உரிய விசாரணை மேற்கொண்டு எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரால் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து, சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 24.02.2025 19 வயது எதிரி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, எதிரிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி சம்பவ நிகழ்வில் சிறப்பாக பணிபுரிந்து, துரிதமாக செயல்பட்டு எதிரிகளை கைது செய்து அசம்பாவிதம் ஏதும் நடவாமல் தடுத்த இராயப்பேட்டை சரக உதவி ஆணையாளர் திரு.N.இளங்கோவன், போக்சோ வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, இறுதி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆஜர் செய்து, குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000/- பெற்று தந்த W-27 வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.C.கலா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., (26.02.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.