S3 இன்டர்நேஷனல் வழங்கும் கிட்ஸ் அண்ட் டீன் ஃபேஷன் ஷோ

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள த சவேரா ஓட்டலில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. ஐந்து முதல் 18 வயதிற்குட்பட்டோருக்கு S3 இன்டர்நேஷனல் கிட்ஸ் அண்ட் டீன் பேஷன் ஷோ நிறுவனர் டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி தலைமையில் இப்போட்டியின் முதல் சுற்று போட்டிகள் டிசம்பர் 7ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றன. இரண்டாம் சுற்று போட்டி ஜனவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

பிக் பாஸ் பிரபலம் ஜனனி, நடிகை சஞ்சனா சிங், எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு, உஷோதயா சிஎஸ்பி கார்டன்ஸ் சிஇஓ கல்யாணி, அமிழ்தம் உணவகம் சிஇஓ உமா சுப்ரமணியன், கார்டு அறக்கட்டளை மருத்துவர் கிரிதரன், ஜீவன் மித்ரா Fertility மருத்துவமனை நிறுவனர்களான டாக்டர் ரம்யா ராமலிங்கம், மலர்கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதேபோல், MSME சென்னை மாவட்ட டைரக்டர் உதய், ஆராய்ச்சியாளர் பாரதி நடராஜன் உள்ளிட்ட பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

இப்போட்டியில் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக சிலம்பாட்டம், பாட்டு, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறுதிச்சுற்றில் 5-9 வயது சுற்றில் 11 சுட்டி குட்டீஸ்களும், 9-12 வயதிலான 11 சிறுவர், சிறுமிகளும், 13 முதல் 18 வயதிலான 9 சிறுவர் சிறுமிகளும் பங்கேற்றனர். அதில் 5-9 வயது சிறுவர்கள் பிரிவில் ட்ரெண்ட்ஸ் ஜூனியர்ஸ் மற்றும் சிட்னியின் டிசைனர் உடையில் ஓபனர்களாக களமிறங்கிய பாண்டிச்சேரியைச் சேர்ந்த பிரஜீத் மற்றும் சர்வேஷ் குழந்தை மாடல்கள் நிகழ்ச்சியின் டாப் மாடல்களாக கலக்கினார்கள்.

10-13 வயது சிறுவர்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த ஹரிஷ், ஆரவ் ஓபனர்களாகவும் மற்றும் ஆல்ஃபா ஸ்டாப்பராகவும் பங்கேற்றனர்.

14-19 வயது சிறுவர்கள் பிரிவில் கிருஷ்ணா, ஜார்ஜ் இன்பான்ட் ஆகியோர் நிகழ்ச்சியின் தொடக்க மாடல்களாகவும் , சென்னையைச் சேர்ந்த ஆஷிஷ் ராம் ஷோவின் ஸ்டப்பராகவும் பங்கேற்றனர்.

5-9 வயது சிறுமிகள் பிரிவில்

அன்தாரா, ஷாம்ருதா மற்றும் முஸ்கன் பாத்திமா ஆகியோர் நிகழ்ச்சியின் ஓபனர்களாக இருந்தனர்.

10-13 வயது சிறுமிகள் பிரிவில்

மதுரையைச் சேர்ந்த லுக்ஷரா மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த எபின் ஜோவிதா ஆகியோர் நிகழ்ச்சியின் ஓபனர்களாக இருந்தனர்.

13-19 வயது சிறுவர்கள் பிரிவில்
சென்னையிலிருந்து நிகழ்ச்சியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேஷ்னா, அனன்யா விஸ்வேஷ் மற்றும் ஜெசிகா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இஷா, வேதா மற்றும் நான்சி ஆகியோர் நிகழ்ச்சியின் ஸ்டாப்பர்களாக
பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ஜூனியர், மெக்கென்சிஸ், ஜேடன் ப்ரொடக்ஷன்ஸ், ஸ்போட்ரிக்ஸ்ரேயாஸ் குளோபல் அகாடமி, கார்டு டிரஸ்ட், நேச்சுரல்ஸ், லிட்டில் மில்லேனியம், குளோபல் ஆர்ட், அப்பல்லோ ஸ்பெக்ட்ரா, கோஸ்கி, ட்ரூலி ஹெர்பிவோர், சிக்ஸ் க்யூப் மீடியா, ஈகைஇனிது, பிக்சல் பஸ்ஸ், உஷோதயா சிஎஸ்பி கார்டன், ஐயனார் குரூப்ஸ், ட்ரூலி ஹெர்பிவோர், சுயம் மைண்ட் கிளீனிக் அண்ட் வேல்னஸ் சென்டர், குளோ காலேஜ்,ஃபேஷன் டிராக்ட், கார்லிஷெர்மன், TIGP, டான்ஸ் அண்ட் டான்ஸ் அகடாமி, கோகோன், டாலின் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர்களாக இணைந்தனர்.

பிரபல காஸ்ட்யூம் டிசைனர் சிட்னி சிலேடன் இந்த நிகழ்ச்சிக்கான ஆடைகளை வடிவமைத்துள்ளார்.

இது வெறும் குழந்தைகளுக்கான கண்கவர் ஃபேஷன் ஷோவாக மட்டுமின்றி, சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஃபேஷன் ஷோவில் சிஷி பவன், டோர்காஸ் ஹோம் உள்ளிட்ட அறக்கட்டளைகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மற்றும் மன வளர்ச்சி குன்றிய 8 குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 சிறுவர், சிறுமிகளும் சென்னையில் நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியில் எஸ்3 இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் சார்பில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சேர்ந்த டாக்டர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, அவரது மகள் சரிஹா செளத்ரியும் அழகு துறையில் அடுத்தடுத்து சாதனை படைத்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்த போட்டியில் பங்கேற்ற பிளாரன்ஸ் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பெற்றார். மீண்டும் அடுத்த ஆண்டே அமெரிக்காவில் நடைபெற்ற திருமதிகளுக்கான அழகி போட்டியில் “Ms International world people’s Choice winner 2022” என்ற பட்டத்தை வென்றார். சமீபத்தில் கூட பிளாரன்ஸ் ஹெலன் நளினி, “மிஸ் ஸ்பிரிட் ஆப் வோல்டு யுனிவர்ஸ் அன் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு பீப்பிள்” என்ற பட்டத்தையும், அவரது மகள் சரிஹா சௌவுத்ரி “மிஸ் வேர்ல்ட் யுனிவர்சல் 2024” என்ற பட்டத்தை வென்றுள்ளனர்.

இப்படி பல்வேறு அழகி போட்டிகளில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு அம்மாவும், மகளும் தற்போது இளம் பெண்களுக்கு அழகி போட்டிகளில் பங்கேற்பதற்கான ஸ்டார்ட்டிங் டு எண்ட் பயிற்சிகளை வழங்குவது, பயிற்சியாளராக செயல்படுவது என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

About admin

Check Also

Felicity Theatre presents “Humare Ram”, a theatrical extravaganza in Chennai

Chennai, 19th March 2025: India’s leading theatre company, Felicity Theatre proudly presents “Humare Ram,” a theatrical extravaganza of epic …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat