செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, இரண்டு நாள் தொழில் மேம்பாட்டுப் பயிலரங்கம்.

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் பெண்கள் கல்லூரிமாணவர்களின் கல்வி அனுபவங்களை வளப்படுத்தவும், மாணவிகளின் திறன்களை  வளர்த்து வேலைவாய்ப்பைமேம்படுத்தவும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஆதரிக்கவும்ஒரு தொடர்ச்சியான முயற்சியை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஃபிப்ராஸ் இன்டர்நேஷனல் மற்றும் வாத்வானிஅறக்கட்டளையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இரண்டு நாள்தொழில் மேம்பாட்டுப் பயிலரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. 

​தொடக்க அமர்வின் போது, ​​சிடிடிஇ மகளிர் கல்லூரி மற்றும் ஃபிப்ராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கல்லூரி முதல்வர்டாக்டர். எஸ். ஸ்ரீதேவி, துணை முதல்வர் டாக்டர். பி.ஜே. குயின்சி ஆஷா தாஸ், ஃபிப்ராஸ்இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குநர் திரு.எல்லாத்பிரவீன், சொல்யூஷன் பிரிட்ஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ்தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஹேமச்சந்திரன்வெங்கடராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 

​திரு. ஹரி பாலச்சந்திரன் (சேனல் டெவலப்மெண்ட்துணைத் தலைவர்,வாத்வானி அறக்கட்டளை) அவர்கள் பேசுகையில் ,நேரம் கடைப்பிடித்தல் , திறன்களை வளர்த்து கொள்ளுதல், சிறந்த முறையில் தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளும் திறன் இவைகளை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார். மேலும் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன; ஆனால் அதைச் செய்வதற்குத் தேவையான திறமையான நபர்கள் கிடைப்பது அரிதான சூழல் உள்ளது. எனவே மாணவிகள் தங்களைத் திறமை உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

இப்பயிலரங்கத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த300க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர். சொல்யூஷன்பிரிட்ஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸின் தலைமை நிர்வாகஅதிகாரி திரு. ஹேமச்சந்திரன் வெங்கடராஜன்,அவர்கள் பேசுகையில் கார்ப்பரேட் நிறுவனத்திற்குத்   தேவைப்படும் திறன்களை மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்  என்பதைத் தன் நிஜ வாழ்க்கை அனுபவங்களையும் நிகழ்வுகளையும் மேற்கோள் காட்டி விளக்கினார். 

About admin

Check Also

ICSI NEW INITIATIVE PROGRAM FOR STUDENTS

Chennai, 24th March 2025: The Institute of Company Secretaries of India (ICSI) is a premier professional body …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat