ரமண பகவானின் 144 வது ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் மாபெரும் அன்னதானம்

ரமண பகவானின் 144 வது ஜெயந்தியை முன்னிட்டு பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் திம்மகவுடா,சுனிதா திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் திருவண்ணாமலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் வழங்கி சேவை செய்து வழிபாடு

1879 ஆம் ஆண்டு திருச்சூழி கிராமத்தில் மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீ ரமண பகவான். திருவண்ணாமலை – செங்கம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ.ரமண பகவானின் ரமணாசிரமம்.

ஒவ்வொரு ஆண்டும் ரமண பகவானுக்கு மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

அதன்படி 144- வது ஜெயந்தி விழா ரமணர் ஆசிரமத்தில் வெகு விமர்சையாக தொடங்கி நடைபெற்றது.

முன்னதாக ரமண பகவானுக்கு தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வண்ண வண்ண மலர்களை கொண்டு மலர் மாலைகள் தொடுத்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதற்காக ரமணரின் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ரமணாசிரமத்தில் குவிந்துள்ளனர்.

ஆன்மீக பக்தர்களுக்காக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா திம்மகவுடா, மரு. திம்மகவுடா மற்றும் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் ரமணாசிரமம் அருகில் அன்னதானம் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமலா திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் வெங்கட்ரமண ரெட்டி அன்னதானத்தினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து
காஞ்சிபுரம் இட்லி, கேசரி, போளி, உப்புமா, வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு வகையான அன்னதானங்கள் ரமண பக்தர்களுக்கும் கிரிவலம் பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.

ரமண ஜெயந்தி தினமான இன்று அதிகாலை 6 மணி முதல் தொடர்ச்சியாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இட்டிலி பொங்கல் கேசரி போளி சாம்பார் சாதம் தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு வகைகளை தயார் செய்து சுனிதா திம்ம கவுடா குடும்பத்தினர் தொடர்ந்து அன்னதானத்தை வழங்கினர்.இரண்டு நாட்களாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறி உபசரிப்பு.

ரமண பக்தர்களும் கிரிவல பக்தர்களும் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

About admin

Check Also

ஜோயாலுக்காஸ் வைர நகை கண்காட்சி ஆகஸ்ட்15 முதல் செப். 1, 2024 வரை, கோவை கிராஸ்கட்ரோடு ஜோயாலுக்காஸ் ஷோரூமில்

கோயம்புத்தூர்; தலைசிறந்த ஆபரணங்களின் அழகைகொண்டாடுபவர்களுக்கு, வைர நகை பிரியர்களுக்குஜோயாலுக்காஸ் நடத்தும் ‘டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ ஓர்அற்புத வாய்ப்பு. இந்த வருடத்தின் மிக முக்கியமான ஆபரணகண்காட்சியாக விளங்கும் இந்த டைமண்ட் ஜுவல்லரி ஷோஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறுகிறது. ஜோயாலுக்காஸ் தன்னுடைய தலைசிறந்த கைவினைத்திறன் மற்றும் நேர்த்தியான வடிவமைப்பிற்காக உலகஅளவில் புகழ்பெற்று விளங்குகிறது. தற்போது இந்தகண்காட்சிக்காக  இதுவரை கண்டிராத வைரங்கள், அன்கட்வைரங்கள் மற்றும் பிரஷ்யஸ் கற்களை மிக நுணுக்கமானவேலைப்பாட்டில் மிக நேர்த்தியாக ஆபரணங்களில்வடிவமைத்துள்ளது. இத்தகைய விசேஷ ஆபரணங்கள் இந்தடைமண்ட் ஜுவல்லரி ஷோ-வில் மட்டுமே கிடைக்கும். இந்த கண்காட்சி குறித்து ஜோயாலுக்காஸின் நிர்வாகஇயக்குனர் மற்றும் சேர்மன் திரு. ஜோய் ஆலுக்காஸ்அவர்கள் குறிப்பிட்டதாவது “தனித்துவமான ஜுவல்லரிகலெக்ஷன்கள் மட்டுமல்லாது மிக உயர்ந்த தர நிலைகொண்ட டிசைன்களையும் வழங்குவதில் நாங்கள்பெருமகிழ்ச்சி கொள்கிறோம், எங்களின் புகழ் பெற்ற இந்தநகைகள் கலைநுட்பத்துடன் மிகச் சிறப்பாகவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரணகண்காட்சிக்காகவே வடிவமைக்கப்பட்ட ஜுவல்லரிகள் நகை ஆர்வலர்களுக்கு, அவர்கள் விரும்பும் கலெக்ஷன்களைவாங்கிடும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தருவது உறுதி”இணையற்ற வடிவமைப்புகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்தகைவினைத்திறனை வெளிப்படுத்தும் இந்த வைர நகைகண்காட்சியில் சிறப்பான சலுகைகளும் உள்ளன. ₹1 லட்சம்மற்றும் அதற்கு மேல் உள்ள வைர நகைகளை வாங்கினால், 1 கிராம்  தங்க நாணயம் இலவசமாக கிடைக்கும்.கோவை கிராஸ்கட் ரோடு ஷோரூமில் நடைபெறும் இந்தஜுவல்லரி கண்காட்சியில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான வைர நகைகளையும், உலகின் ஈடு இணையற்றஆபரண கலெக்ஷன்களையும் ஒரே இடத்தில் பார்த்துமகிழலாம். அதே சமயம் மிகச்சிறந்த விலைகளில் சிறப்புசலுகைகளில் உங்கள் மனம் கவர்ந்த வைர நகைகளைவாங்கி மகிழலாம்.

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat