தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சென்னை தலைமையகம் முன்பு ஏ.ஐ.சி.சி.டி.யூ தொழிற்சங்கம் சார்பாக சுமைப்பணி தூய்மை பணி தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில தலைவர் தோழர் சங்கர பாண்டியன் தலைமை தாங்கினார் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கே கோவிந்தராஜ் ஏ.ஐ.சி.சி.டி.யூ மாநில சிறப்பு தலைவர் தோழர் இரனியப்பன், மாநில நிர்வாகிகள் தோழர்கள் திருநாவுக்கரசு, பி டி ராஜசேகர், செந்தில்குமார், எழிலரசன் மற்றும் கோவை மண்டல திருப்பூர் மண்டல சங்க நிர்வாகிகள் முன்னணிகளும் தமிழக அளவில் தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மாநிலத் தலைவர் தா.சங்கர பாண்டியன் ஆர்ப்பாட்டத்தில்
கோரிக்கைகளாக :
1) சுமை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் சுமை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
2) தூய்மை பணியாளர்களுக்கு பிஎப் பிடித்தம் செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
3) சுமை பணியை தூய்மை பணியை அவுட்சோர் செய்வதை நிர்வாகம் கைவிட வேண்டும்.
4) அரசு உத்தரவுப்படி ஓராண்டு பணி முடித்த சுமை தூக்குவோரை வரன்முறை வேண்டும்
5) அரசு கொள்கை முடிவுப்படி தகுதி உள்ள சுமை பணியாளர்களுக்கு பச்சை அட்டை வழங்கி லீவு ஊதியம் வழங்க வேண்டும்
6) திருப்பூர் மண்டலத்தில் முறைகேடாக சுமை தூக்குவோர் கூலியை மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
7) தொழிலாளர் வர்க்கம் உயிர்த்தியாகம் செய்து கடினப்பட்டு ஏற்படுத்திய தொழிலாளர் நல சட்டங்களை நான்கு தொகுப்பு சட்டங்களாக சீர்குலைத்த மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப ஆர்ப்பாட்டம் உறுதி ஏற்றது.