‘‘ஃபேர்ப்ரோ 2023’’ சொத்து விற்பனை கண்காட்சியையொட்டி கிரெடாய் சென்னை சார்பில் வீட்டு கடன் மேளா:

சென்னை, பிப்.10–

ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் உச்ச அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு – சென்னை மண்டலம் (கிரெடாய் சென்னை) அதன் வருடாந்திடர சொத்து மற்றும் ரியல் எஸ்டேட் கண்காட்சியை ஆண்டுதோறும்நடத்தி வருகிறது. 15வது ஆண்டாக இந்த ஆண்டு வரும் பிப்ரவரி17–ந்தேதி முதல் 19–ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ கண்காட்சி நடைபெற உள்ளது.

இதையொட்டி அங்கு வரும் வீடு, சொத்துகளை வாங்க விரும்பும்வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் வங்கி கடன்தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு அளித்து அவர்களுக்கானவங்கி கடன் வசதியை வழங்க 5 வங்கிகள் பங்கேற்கும் வங்கி கடன்மேளாவை கிரெடாய் சென்னை இன்று முதல் 12–ந்தேதி வரைசென்னை, தி. நகரில் உள்ள விஜயா மகாலில் நடத்துகிறது.

இந்த கடன் மேளாவை கிரெடாய் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ன், எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர்ராதாகிருஷ்ணா, கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன்மற்றும் ‘‘ஃபேர்ப்ரோ 2023’’ கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்க்ருதிவாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

இந்த கடன் மேளாவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன்வங்கி, எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட், எச்டிஎப்சி வங்கிமற்றும் கனரா வங்கி ஆகிய 5 வங்கிகள் பங்கேற்கின்றன. இந்தவங்கிகள் சார்பில் இங்கு வரும் நபர்களுக்கு அவர்களின் வீட்டு கடன்சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் தீர்வு வழங்கப்படுவதோடு, அவர்களின் கடனுக்கு முன் அனுமதியும் செய்து தரப்படும்.

இது குறித்து கிரெடாய் சென்னை தலைவர் சிவகுருநாதன்கூறுகையில், கண்காட்சிக்கு முன் நடைபெறும் இந்த கடன் மேளாவீட்டு கடன் வாங்குபவர்களுக்கான தேவையை பூர்த்தி செய்வதோடு, அதற்கான ஆவணங்கள் மற்றும் சொத்துக்கு ஏற்ப எவ்வளவு கடன்தொகை வழங்கப்படும் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும். மேலும்கடனுக்கான முன் அனுமதியும் செய்யப்படும். இந்த முன்அனுமதியின் மூலம் அவர்கள் கண்காட்சியில் தங்கள் பட்ஜெட்டிற்குஏற்ற விருப்பமான வீடுகள் மற்றும் சொத்துகளை தேர்வு செய்யலாம்என்று தெரிவித்தார்.

இதேபோல் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் க்ருதிவாஸ்கூறுகையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது.கண்காட்சியில் இடம் பெறும் அனைத்து சொத்துகளும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வீடு வாங்குபவர்கள் எந்த சொத்துக்களையும்எந்தவித சிரமம் இல்லாமல் வாங்குவதற்காக முன்கூட்டியே இந்தகடன் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  

About admin

Check Also

TATA AUTOCOMP ANNOUNCES ACQUISITION OF ARTIFEX INTERIOR SYSTEMS LIMITED

Chennai, March 30, 2025 Tata AutoComp Systems Limited, (“TATAAUTOCOMP”), a leading Indian automotive components manufacturer, has entered into …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat