குடிமகான் படத்தின் மூலம் ஒன்றாக கைகோர்த்து களமிறங்கிய நாளைய இயக்குனர் சீசன்-6 குழு

சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். N இந்தப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அடியெடுத்து வைத்துள்ளார். 

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் இதுவரை தனித்தனி நபர்களாகத்தான் சினிமாவில் நுழைந்து தங்களை வெளிப்படுத்தி உள்ளனர். ஆனால் முதன்முறையாக நாளைய இயக்குனர் சீசன் 6 ரன்னர் அப்பின் மொத்த டீமும் இந்த குடிமகான் படத்தில் இணைந்து ஒன்றாக வெள்ளி திரையில் நுழைந்துள்ளனர் என்பதுதான் இதில் ஹைலைட்டே.  

விஜய் சிவன் அறிமுகக்  கதாநாயகனாக நடிக்க, சாந்தினி தமிழரசன் கதாநாயகியாக நடித்துள்ளார். பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன், சேது, விஜய் டிவி புகழ் கேபிஒய் ஹானஸ்ட் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர  நாளை இயக்குனர்கள் சீசன்-6 டீமில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இதில் நடித்துள்ளனர்.

வழக்கமாக குறும்பட இயக்குநர்கள் சினிமாவுக்குள் நுழையும்போது தாங்கள் இயக்கி வெற்றிபெற்ற குறும்படங்களையே முழுநீள திரைப்படமாக உருவாக்குவது வழக்கம். அதேபோல் இயக்குனர் பிரகாஷும் தனது ‘குட்டி தாதா’ குறும்படத்தையே திரைப்படமாக எடுக்கலாம் என முயற்சித்தபோது அதன் பட்ஜெட் பெரிய அளவில் இருந்ததால் முதலில் இந்த குடிமகான் படத்தை எடுப்பது சரியாக இருக்கும் என முடிவு செய்து களத்தில் இறங்கி விட்டார். 

இந்தப்படம் பற்றி இயக்குனர் பிரகாஷ்.N கூறும்போது, “வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய குடும்பபாங்கான படமாக இந்த ‘குடிமகான்’ உருவாகியுள்ளது. குடியை பற்றிய படம் என்றாலும் அதை தப்பாக புரமோட் பண்ணும் விதமாக இருக்காது. இந்த நாட்டின் பிரஜையையும் குடிமகன் என்று சொல்வார்கள்.. குடிப்பவர்களையும் குடிமகன் என்றுதான் அழைக்கிறார்கள். அப்படி ஒரு குடிமகன், ‘குடிமகானாக’ இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கோணத்தில் இந்த கதை உருவாகியுள்ளது” என்கிறார்.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் தனுஜ் மேனன் இயக்குனர் பிரகாஷின் 27 வருட நண்பர். அவரது குறும்படங்கள் அனைத்திற்கும் இசையமைத்துள்ள இவர், ஏற்கனவே சினிமாவில் நுழைந்து சஞ்சீவன் என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள மெய்யேந்திரன், இதற்குமுன் கேடி என்ற கருப்புதுரை, சில நேரங்களில் சில மனிதர்கள் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அங்கமாலி டைரீஸ் படத்தின் இந்தி ரீமேக்கிலும் தற்போது பணியாற்றி முடித்துள்ளார். இந்தப்படத்தின் படத்தொகுப்பை சிபு நீல் பி.ஆர் மேற்கொண்டுள்ளார்.

விஜய் டிவி புகழ் மணிசந்திரா ஒரு முக்கியமான பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.. இந்தப்படத்திற்காக பல அரங்குகள் அமைக்கப்பட்டு சென்னையிலேயே கிட்டத்தட்ட 50 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.   

 இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர்கள் வெற்றிமாறன், பொன்ராம், அருண்ராஜா காமராஜ், க/பெ ரணசிங்கம் இயக்குநர் விருமாண்டி, அடங்காதே மற்றும் டீசல் படங்களின் இயக்குநர் சண்முகம், ‘விலங்கு’ வெப்சீரீஸ் இயக்குநர் பிரசாந்த் மற்றும் ட்விட்டர் இணையதளத்தில் நடிகர் நகுல் ஆகியோர் வெளியிட்டனர்.

About admin

Check Also

Karky Tamil Academy and Silverzone Organization Announce “Tamil Olympiad” Launched at Future of Education 2024 Conference

Chennai, October 2024 The Future of Education 2024 conference took place today at the IIT …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat