தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பத்திரிகையாளர்கள் நலனிலும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு, கடந்த 2022 -பிப்ரவரி மாதம் 02’ தேதியும், 2022 -அக்டோபர் 28ஆம் தேதியும் “பத்திரிகையாளர்களின் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டத்தை” முன்னெடுத்து நடத்தியது.
சங்கத்தின் கோரிக்கைகளை அரசும் கவனத்தில் கொண்டு 41 மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை உடனடியாக வழங்கியது. அடுத்த கட்டமாக பத்திரிக்கையாளர்கள் நலவாரியத்தின் செயல்பாடுகள் குறித்து நாம் எழுப்பியிருந்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, தமிழக அரசும் பத்திரிகையாளர்களுக்கு வாரியம் அறிவித்த போது பத்திரிகைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், பிழை திருத்துவோர், நிருபர்கள், புகைப்பட கலைஞர்கள், அலுவலகப் பணியாளர்கள் என அனைவரையும் உறுப்பினராக வாரியத்தில் சேர்க்கப்படும் என அறிவித்தது.
தற்பொழுது, முதல் கட்டமாக 2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசு செய்தி துறையால் வழங்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அரசு அங்கீகார அட்டையை அட்டையும் (ACCREDITATION CARD) செய்தியாளர்கள் அடையாள அட்டை (PRESS PASS) உள்ளவர்களை மட்டும் வாரியத்தில் உறுப்பினர் ஆக்கும் முயற்சியில் அறிக்கையை வெளியிட்டு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
ஆரம்பத்திலிருந்தே ஆர்என்ஐ&ல் பதிவுபெற்ற மாத பருவ இதழ்களில் பணியாற்றும் மாநில, மாவட்ட, தாலுகா வாரியாக உள்ள அனைத்து முன் களப்பணியாளர்கள் ஆகிய செய்தியாளர்களுக்கும் அங்கீகார அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாளாக சங்கம் முன்னெடுத்து, வலியுறுத்தி வருகிறது.
ஆனால் செய்தித் துறையோ நமது நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தி வருகிறது. தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மற்ற வாரியங்களில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் இல்லை. அந்தந்த தொழில் சார்ந்த சங்கங்கள் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வாரியத்தில் உறுப்பினர்களாக இணைகிறார்கள்.
ஆனால் முன் களப்பணியாளர்கள் ஆன பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிபந்தனை ? எனவே அரசு உடனடியாக ஆர்என்ஐ&ல் பதிவுபெற்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை வைத்து உடனடியாக வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நமது சங்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கூறுகிறோம்.
2022-ம் ஆண்டுக்கான தமிழக அரசு செய்தி துறையால் *வழங்கப்பட்ட *பத்திரிக்கையாளர்கள் *அரசு அங்கீகார அட்டையை அட்டையும்
(ACCREDITATION CARD) செய்தியாளர்கள் *அடையாள அட்டை (PRESS PASS) உள்ளவர்கள் மட்டுமே வாரியத்தில் உறுப்பினர் ஆக பதிவு செய்ய முடியும் என்ற அறிவிப்பு *பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தையும், பணி பாதுகாப்பையும் மிகப்பெரிய *கேள்விக்குறியாக *மாற்றுகிறது*
எனவே அரசு உடனடியாக இந்த அறிவிப்பினை மாற்றி ஆர்என்ஐ&ல் பதிவுபெற்ற செய்தி நிறுவனங்களால் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைவரையும் வாரியத்தில் இணைப்பதற்கான அறிவிப்பை காலதாமதமின்றி தமிழக அரசின் செய்தித் துறை வெளியிட வெளியிட வேண்டுமென்று சங்கத்தின் சார்பாக தமிழக முதல்வர் தனி கவனத்திற்கு ஆர்என்ஐ பதிவுபெற்ற அனைத்து செய்தி நிறுவனங்களில் பணியாற்றும், நிறுவனத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் அனைவரும் வாரியத்தில் உறுப்பினராக வேண்டும் என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் கேட்டுக்கொள்கிறது