தமிழக செய்தித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் பொதுச்செயலாளர் கெ.கதிர்வேல், இணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் நிலாவேந்தன் உள்ளிட்டோர் நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் செய்தித்துறை மானியக் கோரிக்கையில் பத்திரிகையபாளர் வாழ்வாதார கோரிக்கைகளை அமைச்சரை சந்தித்து மானிய கோரிக்கையில் இடம் பெற வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அறிவிக்கும் எந்தவொரு பயனும் கடைக்கோடியில் முன்களப்பணியாற்றும் அரசு அங்கீகாரம் அட்டை பெறாத தாலுகா நிருபர்களுக்கும் பொருந்துகின்ற வகையில் பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரும் & செய்தித்துறைஅமைச்சரும் வெளியிட வேண்டும்
தாலுகா வாரியாக பணியாற்றும் பருவ இதழ்-நாளிதழ் -தொலைக்காட்சி அனைத்து
*செய்தியாளர்களுக்கும் *மாவட்ட செய்தித்துறை *அங்கீகாரம் வழங்க *வேண்டும்*
சென்னை போன்ற மாநகரங்களில் பணியாற்றும் பத்திரிகை துறை சார்ந்தவர்களுக்கு
*இலவச அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான முன் *முயற்சியை தமிழக*
அரசு மேற்கொள்ள வேண்டும்
மாவட்ட, தாலுகா வாரியாக பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அவர்கள்
வசிக்கும் பகுதியிலேயே இலவச வீட்டுமனை, இலவச வீடு உள்ளிட்ட திட்டங்களை
அந்தந்த மாவட்ட நிர்வாகம் வழி வகை செய்ய வேண்டும்
ª பத்திரிகையாளர்களின் பணி பாதுகாப்பு நலனைஒன்றிய மாநில அரசுகள்
காலதாமதமின்றி சட்டபூர்வமாக உறுதி செய்திட வேண்டும்
தமிழக அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம்
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே பயன்படுகின்ற
விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதுஇதில் ஆர்என்ஐ -ல் பதிவு பெற்று*
தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வரும் பருவ இதழ் நாளிதழ்களில்
பணியாற்றும் பத்திரிகை துறை சார்ந்த ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள்,
தாலுகா நிருபர்கள், புகைப்படகலைஞர்கள் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள்
மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீட்டு
திட்டம் பயன்படுகின்ற விதத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்தை விரிவாக்கம்
செய்ய வேண்டும்
ஆர்என்ஐ- ல் பதிவு பெற்று வெளிவருகின்ற நாளிதழ், பருவ இதழ்களில்
பணியாற்றுகின்ற அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் ஒரே மாதிரியான அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும்.
ஆர்என்ஐ- ல் பதிவு பெற்ற அனைத்து நாளிதழ், பருவ இதழ்கள் ஆண்டுதோறும்
இ.ஃபைலிங் சமர்பித்து வருகின்றனர். இந்நிலையில் மாநில அரசு
செய்தியாளர்களுக்கு அங்கரீகார அட்டை வழங்குவதில் அச்சகத்தார் சான்றிதழ்,
*ஆடிட்டர் சான்றிதழ் கேட்பதை தவிர்த்து இ-ஃபைலிங் *சான்றிதழை*
வைத்து அரசு அங்கீகார அட்டை வழங்க வேண்டும்
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு “பத்திரிகையாளர்கள்
பாதுகாப்பு சட்டத்தை காலதாமதமின்றி “வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே
தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்
*பத்திரிகையாளர் நல வாரியத்திற்கு *தொழிலாளர் சட்டம் *சார்ந்த *ஆலோசனைகள்*
வழங்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களின் நிபுணத்துவம் பெற்ற
வழக்கறிஞர்களை உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும்.
இதற்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கிய பல்வேறு நலத்திட்டங்கள்
*பெறுவதற்கு அரசு “அங்கீகார அட்டை வைத்துள்ள *பத்திரிகையாளர்கள்*
மட்டுமே பயன்பெற்று வந்துள்ளனர் இந்த போக்கை தவிர்த்து
அரசு அங்கீகார அட்டை பெறாத ஆர்என்ஐ ல் பதிவு பெற்ற பருவ
இதழ்கள் *நாளிதழ்களில் *பணியாற்றும் அலுவலக “பணியாளர்கள் முதல்
தாலுகா செய்தியாளர்கள் வரை பாராபட்சமின்றி அனைவரும் தமிழக அரசு
*அமைத்துள்ள *பத்திரிகையாளர் நலவாரியத்தின் மூலம் “பயன்படும் வகையில்
நலவாரியத்தின் செயல்பாடுகள் அமைய வேண்டும் பத்திரிகையாளர்களின் குழந்தைகள் அரசு தனியார் பள்ளிகள் கல்லூரிகளில்
*படிப்பதற்கும் அரசு *தனியார் “நிறுவனங்களில் *வேலைவாய்ப்பிற்கும் *இடஒதுக்கீடு*
வழங்கிட வேண்டும்
ஆன்லைன் மீடியாக்களையும் அங்கீகரிக்க வேண்டும்
Check Also
FIBA Asia Cup 2025 Qualifers (Window 2) will be held on November 22 & 25
Chennai, FIBA Asia Cup 2025 Qualifers (Window 2) will be held on November 22 & …