‘ஓ சொல்றியா மாமா..’ வெற்றியை  தொடர்ந்து ‘வெப்’ படத்துக்காக ஆண்ட்ரியா பாடிய பாடல்..

வேலன் புரடக்சன்ஸ் சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன்  திரில்லர் படம் ‘வெப்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹாரூன்  இயக்கியுள்ளார். நட்டி என்கிற நடராஜன் சுப்பிரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.  ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். 

ஐடி தொழில்துறை வளர ஆரம்பித்த பின்பு கிழக்குக் கடற்கரை சாலையில் புதிதாக உருவெடுத்த பார், பப் கலாச்சாரத்தை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர்  ஹாரூன்.

சமீபத்தில் ‘புஷ்பா’ படத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘ஓ சொல்றியா மாமா..’ பாடலை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா ‘வெப்’ படத்துக்காக

“வீக் டே ஃபுல்லா வேலை செய்ய கழுத்துல டைய்..
வீக்கெண்ட் வந்தா ஏத்திக்கிட்டு ஆகிடலாம் ஹை..
இரவு முடியும் வரை… நீ ஆடு.. “

எனும் பப் பாடலை பாடியுள்ளார். பாடலை மிர்ச்சி விஜய் எழுதியுள்ளார். சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியில் படத்தின் பாடல் வெளியீடும் அடுத்த மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

About admin

Check Also

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat