Paytm users can book Train tickets now via IRCTC and pay later

[ad_1]

Paytm-ன் தாய் நிறுவனமான One97 Communications Ltd, அதன் துணை நிறுவனமான Paytm Payments Services Ltd ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்காக Paytm போஸ்ட்பெய்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. டிஜிட்டல் வாலட் நிறுவனம் டிக்கெட் முன்பதிவுக்காக ‘Book Now, Pay Later’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரே கிளிக்கில் வாடிக்கையாளர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் அம்சம் IRCTC உடன் இணைந்து கொண்டுவரப்பட்டுள்ளது.

IRCTC-லிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது சில நேரங்களில் தொந்தரவாக இருக்கும். குறிப்பாக உங்கள் இண்டர்நெட் மெதுவாக அல்லது பலவீனமாக இருக்கும்போது இப்பிரச்சனையை பெரும்பாலானோர் எதிர்கொண்டிருப்பார்கள். இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் Paytm-ன் புதிய அம்சம், உடனடியாகப் பணம் செலுத்த தேவையில்லை. மாறாக, ஒரே கிளிக்கில் உடனடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள முடியும். வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைக் கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்தல், பில்கள் மற்றும் ஷாப்பிங் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“தடையற்ற டிஜிட்டல் கட்டணங்கள் மற்றும் நிதிச் சேவைகளை இயக்க பயனர்களுக்கு புதுமையான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம். Paytm Postpaid (BNPL) இப்போது IRCTC மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். IRCTC உடனான ஒப்பந்தம் மூலம், Paytm PG பயனர்களுக்கு உடனடி டிக்கெட் முன்பதிவுகளுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கட்டணங்களை வழங்கும். இதற்கான கட்டணத்தை நீங்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம்” Paytm Payments Services Limited இன் CEO பிரவீன் ஷர்மா கூறியுள்ளார்.

இந்த அம்சத்தைப் பயன்படுத்த, IRCTC-க்குச் சென்று உங்கள் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு உள்நுழையவும். உங்கள் பயண விவரங்களை இறுதி செய்து, கட்டணங்கள் பிரிவில் ‘பின்னர் பணம் செலுத்து’(Pay Later) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Paytm போஸ்ட்பெய்டு என்பதைக் கிளிக் செய்து, OTP-ஐ உள்ளிடடால் போதும்.

Source link

About

Check Also

Top-5 Waterproof Smartphones in India | Waterproof Smartphones

[ad_1] மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஸ்மாரட்போன் வைத்திருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சிறிய கவனக்குறைவும் விலை உயர்ந்த ஸ்மார்போனை பழுதாக்கிவிடும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat