5G Technology | 1G முதல் 5G வரை; உலகையே மாற்றப் போகும் 5G கடந்து வந்த பாதை

[ad_1]

இந்தியாவிலேயே முதன்முறையாக 5ஜி சேவையை சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று முன் தினம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தார்.

இந்தியாவில் 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், விரைவில் 5ஜி சேவை துவங்கப்பட உள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருவதாக சமீபத்தில் பிரதமர் மோடி கடந்த 17ம் தேதி அறித்தார். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள், நாட்டில் 6ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுவோம் என்றும் பிரதமர் மோடி இலக்கை நிர்ணயித்துள்ளார். 

1ஜியில் இருந்து 5ஜி

இந்தியாவில் இணையம் 1995 இல் தொடங்கியது. அதிலிருந்து இணைய உலகம் ஒவ்வொரு நாளும் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. வெறும் 27 வருட இந்தப் பயணத்தில், இந்தியாவின் இணையத்தின் வேகம் இப்போது 5ஜியை எட்டப் போகிறது. இதன் மூலம் இந்தியா 6ஜியை நோக்கி அடியெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது.

1G முதல் 5G வரை, இணையம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ‘ஜி’யும் இணையத்திற்கு என்ன அர்த்தம் என்பதைப் புரிந்துகொள்வோம்…

1G முதல் 2G வரை: குரல் அழைப்புக்கு முக்கியத்துவம் 

பெரும்பாலான 1G சேவை  1970களில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தலைமுறை தொழில்நுட்பத்தின் உதவியுடன், குரல் அழைப்பு மட்டுமே செய்ய முடிந்தது. அதில் ஒலி தரம் மோசமாக இருந்தது, கவரேஜ் பகுதியும் மிக குறைவாகவே இருந்தது. அதோடு ரோமிங் வசதி இல்லை. 1991 ஆம் ஆண்டு 2ஜி வருகைக்குப் பிறகு, இணைய உலகம் வேகம் பெற்றது. இரண்டாம் தலைமுறையில், அனலாக் சிக்னல்கள் முற்றிலும் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டன.

மேலும் படிக்க | Oppo போனை இதைவிட குறைவாக வாங்க முடியாது: அமேசானில் அதிரடி தள்ளுபடி 

2G மூலம் மக்களுக்கு ரோமிங் வசதி கிடைத்தது. இது தவிர சிடிஎம்ஏ, ஜிஎஸ்எம் போன்ற விஷயங்களும் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தன. சுமார் 50 கேபிஎஸ் வேகத்தில் எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் அனுப்பும் வசதியும் இருந்தது. படிப்படியாக குரல் அழைப்பு மற்றும் இணைய வேகம் இரண்டும் மேம்படத் தொடங்கியது.

3G  அறிமுகம்

2001 ஆம் ஆண்டு 3ஜி இணையம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​இணையம் மிகவும் எளிதாகிவிட்டது. 2ஜியை விட 3ஜி நான்கு மடங்கு வேகம் பெறும் என்று கூறப்பட்டது. இணையத்தின் வேகம் மற்றும் அணுகல்தன்மை காரணமாக, மின்னஞ்சல், வீடியோ அழைப்பு, வழிசெலுத்தும் வரைபடங்கள், இணையத்தில் உலாவுதல் மற்றும் மொபைல் போன்களில் இசையைக் கேட்பது போன்ற வசதிகள் கிடைக்கத் தொடங்கின.

மேலும் படிக்க | மணிக்கு 1300 KM மேக்னடிக் ரயில் அதிவேக ஹைப்பர்லூப்பை உருவாக்க திட்டமிடும் எலோன் மஸ்க்

4G வேகம் உலகிற்கு காட்டிய புதிய வழி

3ஜி இணையத்தின் சகாப்தத்தில் கூட, பலவீனமான நெட்வொர்க் உள்ள பகுதிகளில் இணையத்தைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. 2010 ஆம் ஆண்டில் 4G வருகைக்குப் பிறகு, இணையம் அனைவருக்கும் எளிதாகத் தொடங்கியது. அதிக வேகம், உயர் தரம் மற்றும் நல்ல குரல் அழைப்பு மற்றும் டேட்டா சேவைகள் பன்மடங்கு சிறப்பாக மாறியது. இதன் வேகம் 3ஜியை விட ஐந்து முதல் ஏழு மடங்கு அதிகம்.

இன்று நாம் பயன்படுத்தும் இணையம் பெரும்பாலும் 4ஜி. இன்டர்நெட்டின் வேகத்தால் லைவ் வீடியோக்கள் பார்ப்பது, டாக்ஸி புக் செய்வது, உணவு ஆர்டர் செய்வது, வீடியோ கால் செய்வது போன்றவை சகஜமாகிவிட்டது. இதன் காரணமாக, இணையம் பெருகிய முறையில் பிரபலமடைந்து, முன்பை விட மலிவானதாக இருப்பதால், பெரும்பாலான பொதுமக்களுக்கும் அணுகக்கூடியதாக உள்ளது.

மேலும் படிக்க | வாட்ஸ் அப் பேமெண்டில் நடக்கும் நூதன மோசடி

5ஜியில் கிடைக்கும் வசதிகள்

4G சேவையில் லேடென்ஸி என்னும் தாமதம் 50 மில்லி விநாடிகள் என்ற நிலையில், 5G இல் தாமதம் 1 மில்லி விநாடிகள் மட்டுமே. தாமதம் என்பது தரவு ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க எடுக்கும் நேரத்தைக் குறிக்கிறது. 5ஜி தொழில்நுட்பத்தின் உதவியுடன் சாதனங்களில் ஆற்றல் தேவை கண்டிப்பாக குறையும். இதனால் சாதனம் மற்றும் பேட்டரி ஆயுள் பன்மடங்கு அதிகரிக்கும்.

5G பதிவிறக்க வேகத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் தரும். செல்லுலார் அலைவரிசை மேம்பாடி, அதிவேகம் மற்றும் குறைந்த தாமதம் ஆகியவற்றுடன், இணைய உலகம் வியக்கதக்க வேகத்தைப் பெறும்.

இணையத்தால் சூழப்பட்ட உலகம்
 
வரும் காலங்களில் உலகம் முழுவதும் ஸ்மார்ட் சிட்டிகள் கட்டப்படும், தானியங்கி கார்கள், ரோபோடிக் சர்ஜரி போன்றவை சர்வ சாதாரணமாகி விடும். உலகம் முழுவதும் தென் கொரியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் 5ஜி தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் விரைவில் தொடங்கலாம்.

5ஜி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே, 6ஜி பற்றிய விவாதமும் தொடங்கிவிட்டது. இனி வரும் காலங்களில் மொபைல், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களுக்கு மட்டும் இன்டர்நெட் பயன்பாடு இருக்காது என்று கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் மனிதர்களுடன் இணைந்து இயந்திரங்களும் இணையத்தை முழுமையாகப் பயன்படுத்தும்.  வரும் காலங்களில் விர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் எச்டி மொபைல் ஹாலோகிராம்கள் போன்ற தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும். இதற்கு அதிவேக இணையம் தேவைப்படும்.

நாட்டின் முதல் 5ஜி சோதனை தளத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 220 கோடி செலவில் தயாராகியுள்ளது. இதன் உதவியுடன், தொழில்துறையின் பெரிய நிறுவனங்களுடன், தொடக்க நிறுவங்களும் தங்கள் தயாரிப்புகளை 5G இல் சோதனை செய்து தயார் செய்யலாம். இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே இதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இந்த திட்டத்தின் பணிகள் எட்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, ஐஐடி-மெட்ராஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க | அமேசான் அட்டகாச சலுகை; பாதி விலையில் புதிய டிவியை வாங்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Maruti Suzuki Offering Amazing Discount in July 2022: Details Here | Cheapest Cars: ஜூலை மாதம் மாருதி கார்களில் நம்ப முடியாத சலுகைகள், விவரம் இதோ

[ad_1] மாருதி கார்களுக்கான தள்ளுபடிகள் ஜூலை 2022: மாருதி சுசுகி இந்த மாதம் (ஜூலை 2022) அதன் அரேனா ரேஞ்ச் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat