சென்னை, வியாசர்பாடி, B.கல்யாணபுரம், பகுதியில் வசித்து வரும் சதீஷ், வ/23, த/பெ.வைத்தி என்பவரை 08.10.2020 அன்று, அதே பகுதியை சேர்ந்த இருவர் கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அப்போதைய வியாசர்பாடி காவல் ஆய்வாளர் திரு.K.சீனிவாசன் (தற்போது R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய ஆய்வாளர்) எதிரிகள் 1.விக்கி, வ/31, த/பெ.முருகையா, B.கல்யாணபுரம், 2வது தெரு, வியாசர்பாடி, சென்னை 2.ஜெகதீஸ்வரன், வ/23, த/பெ.ஜானகிராமன், B.கல்யாணபுரம், வியாசர்பாடி ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தும், உரிய விசாரணை மேற்கொண்டு எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தார்.

காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் காவல் குழுவினரால் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து, சென்னை, சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 16வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, 26.02.2025 அன்று வழங்கிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் மேற்படி 2 எதிரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2 எதிரிகளுக்கு தலா 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.5000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, இறுதி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆஜர் செய்து, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.5000/- பெற்று தந்த காவல் ஆய்வாளர் திரு.K.சீனிவாசன் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் இன்று (28.02.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.