மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி -செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி

31-07-2024 அன்று சென்னை–11 பெரம்பூர் செவாலியர்டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, சென்னை பொதுநூலகத்துறை, சென்னை வாசிப்பு  மன்றம் மற்றும்ஐன்ஸ்டீன் உலக சாதனை அமைப்பு ஐக்கிய அரபு அமீரகம்இணைந்து நடத்திய மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சிசெவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரிவளாகத்தில் நடைபெற்றது. இயற்கையைப் பாதுகாக்கும்சமூகக் கடமையாகப் பிளாஸ்டிக் இல்லாத உலகம் மற்றும்உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வைநோக்கமாகக் கொண்டு இந்த உலக சாதனை நிகழ்ச்சிநடைபெற்றது. மாணவர்கள் வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் வண்ணங்களில் உடையணிந்துஉடல் உறுப்புகள் வடிவத்தில் அணி வகுத்து அமர்ந்தும்விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துணிப் பைகளைக்கைகளில் ஏந்தி நின்றும் உலக சாதனை நிகழ்த்தினர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி இறைவணக்கப் பாடலுடன் தொடங்கியது. கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் P.J குயின்சி ஆஷா தாஸ் அவர்கள்நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழங்கினார்.  கல்லூரியின்முதல்வர் முனைவர் S. ஸ்ரீதேவி அம்மையார் தலைமையுரைவழங்கி சிறப்பித்தார். சென்னை மாவட்ட நூலகஆணைக்குழுத் தலைவர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் திரு.மனுஷ்யபுத்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஐன்ஸ்டீன்உலக சாதனை அமைப்பின் தலைவர் திரு. கார்த்திக் குமார்அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மாணவர்களுக்குஉலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கிகௌரவித்தார். ஐன்ஸ்டீன் உலக சாதனை அமைப்பின்நிர்வாக ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஜே. மகாலட்சுமி, நிர்வாக அலுவலர்        R. அஜய் வில்லியம்ஸ் ஆகியோர்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.  இந்நிகழ்வில் சி.டி.டி.கல்வி அறக்கட்டளையின்கீழ் இயங்கும் செவாலியர்  டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி, புனிதமேரி பள்ளிகள், பென்டிக் பள்ளிகளைச் சேர்ந்த 2500 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். ஐன்ஸ்டீன் உலக சாதனை அமைப்பின்நிர்வாக இயக்குநர் முனைவர் மோனிகா ரோஷினி அவர்கள்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

About admin

Check Also

Extraction And Analytics From Financial Documents

Prof. Kamal Karlapalem , Professor and Applied Computer Scientist at the Data Science and Analytics …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat