செவாலியர்.டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில், ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் சி.டி.டி.இ நூலகத்தால்,நூலக நோக்கு நிலை அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வு முதலாமாண்டு இளங்கலை (UG) மாணவர்களுக்கு நூலகத்தில் உள்ள பரந்த அளவிலான வளங்கள் மற்றும் சேவைகளைஅறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த அமர்வில் மாணவிகளுக்கு நூலகச் சேவைகள், நூல்களைக் கடன் வாங்கும் சலுகைகள் மற்றும் படிப்பதற்கான வழிவகைகள், மற்றும் கல்வி சார்ந்த
தேடலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புத்தக வகைகளைக் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் நூலக வளாகத்தில் உள்ள மின் புத்தகங்கள், இதழ்கள் மற்றும் தரவுத்தளங்கள் போன்ற இணைய வழி நூலக வளங்களை அணுகுவதற்கான விரிவான வழிகாட்டுதலையும்வழங்கின.
அமர்வில் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்ட தகவலின் தெளிவான புரிதலையும், நோக்கத்தையும் மாணவிகள் வழங்கிய நேர்மறையான பின்னூட்டத்தின் மூலம் உணர முடிகிறது.குறிப்பாக கல்வியில் வெற்றிபெறுவதற்கு டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவது இன்றியமையாத ஒன்று என்பதையும், மாணவிகள் அதற்குசாத்தியமான கூறுகளை மேம்படுத்தி கற்றலை வலுப்படுத்தி கொள்ள வேண்டுமென்பதையும், அவர்களின் கல்விப் பயணம் முழுவதும் நூலகம் அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்கும் என்பதையும் உறுதி செய்யும் வகையில் இந்த அமர்வு அமைந்தது.