
கல்வித் தளத்தில் மாணவர்களை புதுமையான முறையில்உருவாக்குவது தவிர்க்க இயலாதது. இத்தகைய தேவைதற்போதைய சூழலில் அவசியமும் கூட. இதனைப் புரிந்துகொண்டு செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரிICT அகாடமியுடன் இணைந்து ஜூலை 10 முதல் ஜூலை 12, 2024 வரை மூன்று நாட்கள் ஆசிரியர் திறன் மேம்பாட்டுவகுப்பை நடத்தியது. இந்நிகழ்வில் பல்வேறுகல்லூரிகளைச் சேர்ந்த 30 கற்கும் மேற்பட்டபேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ICT அகாடமியின்மூத்த மேலாளர் தி. நிர்மல் குமார் அவர்கள் டிசைன்சிந்தனை என்ற தலைப்பில் மாணவர்களின் கற்பித்தல்முறையில் ஏற்படும் அனுபவங்களை எடுத்துரைத்தார். இந்தமுறையில் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும்சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தஇயலும் என்றார். போட்டி நிறைந்த இன்றைய வேலைவாய்ப்பு சந்தையில் மதிப்பு மிக்க மாணவர்களை உருவாக்கவேண்டும் என்றார். நவீன கல்வி முறையின் சவால்களைஎதிர்கொள்ள கல்வியாளர்களைத் தயார்ப்படுத்துவது இந்தவகுப்பின் நோக்கமாக அமைகிறது.