இந்தியாவின் ‘கிக்-பணியாளர்களுக்காக’ கைடுவயர் ஹேக்கத்தானில்AI தொழில்நுட்பத்தில் இயங்கும் இன்சூரன்ஸ் மாடல்ளை உருவாக்கி சாதனை

சென்னை/பெங்களூரு, மே , 2026: இந்தியாவின் ‘கிக்-பணியாளர்’ (Gig-worker) எனப்படும் தற்காலிகப் பணியாளர் சூழலுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பம் சார்ந்த இன்சூரன்ஸ் மாதிரியை (Insurance model) உருவாக்கும் நோக்கில், கைடுவயர் சாப்ட்வேர் இந்தியா (Guidewire Software India) நிறுவனம் ‘DEVTrails 2026’ என்ற தேசிய அளவிலான மெய்நிகர் ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது. இப்போட்டியில் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று, தங்களது அபாரமான திறமையால் முதலிடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பெங்களூருவில் நடைபெற்ற பிரம்மாண்டமான ‘டெமோஜாம்’ (DemoJam) இறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRMIST) யின் ‘Astro Bugs’ குழுவினர், தங்களது ‘Winkit’ என்ற புதுமையான இன்சூரன்ஸ் மாதிரிக்காக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இப்போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ‘ஆஸ்ட்ரோ பக்ஸ்’ குழுவில், மூன்றாம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவர்கள் பவித்ரா சிபி, நிகில் சிபி, அம்மன் கலீம் கான் மற்றும் ஆயுஷ் தாகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த ‘எம்.ஓ.ஜி ஸ்குவாட்’ (MOG Squad) குழுவினர் தங்களின் ‘கண்டினியூவம்’ (Continuum) மாடலுக்காக இரண்டாம் இடத்தையும் (1st Runner-up), சென்னையின் எஸ்.ஆர்.எம் (SRM) கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ‘கோட் மேவன்ஸ்’ (Code Mavens) குழுவினர் தங்களின் ‘சேஃப்ஷிஃப்ட்’ (SafeShift) மாடலுக்காக மூன்றாம் இடத்தையும் (2nd Runner-up) தட்டிச் சென்றுள்ளனர்.

புனேவில் உள்ள தேசிய காப்பீட்டு நிறுவனம் (NIA) மற்றும் EY இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ‘DEVTrails’ ஹேக்கத்தான் போட்டியில், இந்தியாவின் 30 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 18,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் தேசிய காப்பீட்டு அகாடமி மாணவர்களும் அடங்குவர். இந்தியாவின் 1.2 கோடி தற்காலிகப் பணியாளர்கள் (Gig workers) சந்திக்கும் சவால்களுக்கு, தொழில்நுட்ப ரீதியாக காப்பீட்டு மாடல்கள் மூலம் தீர்வுகளை உருவாக்குவதே இந்த மெகா போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த ‘டெவ்ட்ரெயில்ஸ்’ (DEVTrails) ஹேக்கத்தானில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங் (ML) மற்றும் ஃபுல்-ஸ்டேக் டெவலப்மென்ட் (Full-stack development) ஆகிய துறைகளில் எளிதில் விரிவுபடுத்தக்கூடிய (Scalable) தீர்வுகளை உருவாக்க ஓபன்-சோர்ஸ் (Open-source) தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தினர். அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட திறமைவாய்ந்த குழுவினர் ‘கைடுவயர் கிளவுட் பிளாட்பார்மைப்’ (Guidewire Cloud Platform) பயன்படுத்தி, நிஜ உலக வேலைப்பாய்வுகளுக்கு (Real-world workflows) ஏற்ற புதுமையான காப்பீட்டுத் தயாரிப்புகளை உருவாக்கி அசத்தினர்.

போட்டியில் பங்கேற்ற அணிகளுக்குத் தொடக்க மூலதனம் (Seed capital) வழங்கப்பட்டு, ஆறே வாரங்களுக்குள் ஒரு முழுமையான தீர்வைக் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டது. இக்காலக்கட்டத்தில் அவர்கள் சந்தை வீழ்ச்சி மற்றும் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் (GPS spoofing) போன்ற மோசடிச் சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களைச் செயற்கையாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த அனுபவம் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறமைக்கு ஒரு பெரும் சோதனையாக அமைந்ததோடு, வேகமான மாற்றங்களைக் கொண்ட தொழில்நுட்பத் துறையில் நுழைவதற்கான ஒரு சிறந்த பயிற்சியாகவும் அமைந்தது.

2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி (Economic Survey of Tamil Nadu 2025-2026), கடந்த 2024-25 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 463 பொறியியல் மற்றும் கட்டிடக்கலை (Architecture) கல்லூரிகளும், 492 பாலிடெக்னிக் நிறுவனங்களும் செயல்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்வி மையங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாடு, பொறியியல் ஏற்றுமதியில் (Engineering Exports) தேசிய அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

தேசிய அளவிலான ‘DEVTrails’ இறுதிப் போட்டியில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிகளவில் முத்திரை பதித்திருப்பது, சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளை உருவாக்குவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மிஷின் லேர்னிங் (Machine Learning) போன்ற வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை உருவாக்குவதில் அவர்களின் புதுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது

முகமது அன்சி எஸ், நிர்வாக இயக்குநர் மற்றும் துணை தலைவர் – பொறியியல் பிரிவு, கைடுவயர் இந்தியா கூறுகையில், “திறமை, சரியான தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் வலுவான கூட்டணிகள் ஆகிய அனைத்தும் ஒருசேர இணையும்போது, நிஜ உலகப் பிரச்சனைகளுக்கு எவ்வளவு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளைக் காண முடியும் என்பதற்கு ‘டெவ்ட்ரெயில்ஸ் 2026’ (‘DEVTrails 2026)’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தற்காலிகப் பணியாளர்களுக்காக (Gig workers) பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்முறை காப்பீட்டு மாதிரியானது, இதுவரை காப்பீட்டு வசதிகள் சரியாகச் சென்றடையாத இந்தத் துறையினரிடையே புதிய விவாதங்களை உருவாக்கும். மேலும், இது இன்சூரன்ஸ் குறித்த புரிதலை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கான பொதுக் காப்பீட்டுத் (Non-life insurance) தீர்வுகளை எளிதாகச் சென்றடையவும் வழிவகை செய்யும். இந்தத் தனித்துவமான ஹேக்கத்தான் போட்டியை ஒரு பிரம்மாண்ட வெற்றியாக மாற்ற உறுதுணையாக இருந்த எங்களது கூட்டாளிகளான தேசிய காப்பீட்டு நிறுவனம் (NIA) மற்றும் EY இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,

‘DEVTrails’ என்பது கைடுவயர் (Guidewire) நடத்திய ‘DEVSummit 2026’ மாநாட்டின் ஒரு முக்கிய அங்கமாகும். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான நிகழ்வில், தொழில்நுட்பப் பயிற்சிகள் (Workshops), கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குழு விவாதங்கள் என அறிவுப் பகிர்வுகள் நிறைந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கைடுவயர் இந்தியா குழுவினர் ‘DEVTrails Judge’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தளத்தை உருவாக்கி, இந்த ஹேக்கத்தானில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை ஆய்வு செய்து மதிப்பெண்களை வழங்கியது. கைடுவயர் இந்தியாவின் முன்முயற்சிகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் எவ்வளவு நுணுக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இதுவே ஒரு சிறந்த சான்றாகும்.

About admin

Check Also

India Strengthens Ocean-Tech Push with MoES-Backed Centre at SRMIST

Kattankulathur, Chennai | May 6, 2026: SRM Institute of Science and Technology (SRMIST), Kattankulathur, inaugurated …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat