பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டி

இந்திய திரைபட நடிகர். திரு. அஜய் ரத்தினம் அவர்கள் தேசிய அளவில் ஃபரிதாபாத்,ஹரியானா மாநிலத்தில் சர்வதேச, ஆசிய, காமன்வெல்த் ஆகிய கூட்டமைப்புகளுடன் இணைப்பு பெற்ற பவர் லிஃப்ட் இந்தியா நிறுவனத்தால் தேசிய அளவில் நடத்தப்பட்ட பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் மாஸ்டர் பிரிவு போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை வென்றார்.
அந்த நிறுவனத்தின் தலைவர் திரு. சதிஷ் குமார், சாம்பியன்ஷிப் செயலாளர் திரு. அஜித்நாயர் அவர்கள் இருவரின் முன்னிலையில் பொதுச்செயலாளர் திரு. பிஃஜே. ஜோசப் அவர்களால் வழங்கப்பெற்றார்.
இந்த அது சமயம் இவரது வழிகாட்டியும், தலைமை பயிற்சியாளரும் ஆசிய பவர் லிஃப்டிங் சாம்பியன்,ஷெனாய்நகரில் உள்ள ஃபிட் ட்ரீ ஃபிட்னஸ் சென்டர், எம்.கே. ஸ்கூல் ஆஃப் பவர் லிஃப்டிங் நிறுவனர் மற்றும் உரிமையாளர் திரு. மாய கிருஷ்ணன்,பயிற்சியாளர் திரு. தர்மலிங்கம் உடன் தமிழ்நாடு மற்றும் சென்னை பவர்லிஃப்டிங் சங்க உறுப்பினர்கள் இருந்தனர்.

நடிகர் அஜய் ரத்தினம் அவர்கள் ஏற்கனவே சென்னை,தமிழ்நாட்டில் 07.12.2025 மாநில அளவில் நடைபெற்ற பென்ச் பிரஸ் பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்று தங்கபதக்கத்தை தலைமை விருந்தினராக வந்திருந்த தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மாண்புமிகு. மா. சுப்பிரமணியன் அவர்களின் கரங்களால் பெற்று தேசிய அளவில் கலந்து கொள்வதற்குறிய தகுதி சுற்றில் தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

About admin

Check Also

Hatsun Badminton Centre Budding Talents Continue to Raise the Bar across State Badminton Ranking Tournaments in TN & Kerala

CHENNAI, JUNE 26, 2026: Hatsun Badminton Centre rising talents continued their strong run on the …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat