அறிவு கண் இதழ் 27 ம் ஆண்டு முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடத்த பட்டது.இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி குணப்பாடம் மருந்தியல் துறையின் விரிவுரையாளர் மரு.பாஸ்கர் இராஜமாணிக்கம் அவர்களுக்கு சித்த மருத்துவ துறையில் ஆற்றி வரும் பணிகளை பாராட்டி “சித்தா சேவா ரத்னா “விருது வழங்கப்பட்டது .இவர் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினார்.மேலும் குதிகால்வாதத்தில் (calcaneal spur)வரும் வலியை நான்கு தினங்களில் குறைக்கும் இஞ்சி சுட்டிகை என்னும் சிறப்பு சிகிச்சையை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருது பெற்றது பற்றி மரு பாஸ்கர் அவர்கள் கூறியதாவது விருது பெற்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும்,இதற்கு காரணமாக இருந்த திருவண்ணாமலை சித்தர்கள் குரு பாரம்பரியத்திற்கும்,
விருது வழங்கிய அமைப்பிற்கும், நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக வன்னிப்பெருமாள் ஐபிஎஸ், DGP(ரயில்வே )அவர்களும்,அண்ணாநகர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்களும் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக மரு கனகவேல் இயக்குனர் (NIWE),முனைவர் கிருஷ்ணவேணி இயக்குனர் (IOM),முனைவர் ரமணன் இயக்குனர்
ஒய்வு (IMD),மருத்துவர் சீனிவாசன் சுகாதார கல்வி அலுவலர்,திரு தங்கராஜ் NGC ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.திரு. நாகராஜன் அறிவு கண் இதழ் தொகுப்பு மற்றும் வெளியிட்டாளர் சிறப்பாக விழாவினை ஏற்பாடு செய்து இருந்தார் .