விளையாட்டுத்திடல் மற்றும் சிறுவர் பூங்காவினை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்

சென்னை தியாகராயநகர் தொகுதி 130வது வட்டம் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையின் பின்புறம் 9 கிரவுண்ட் பரப்பளவில் தியாகராய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 75 இலட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள விளையாட்டுத்திடல் மற்றும் சிறுவர் பூங்காவினை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் .நேரு திறந்துவைத்தார் .
தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்மேற்கு மாவட்டச் செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த.வேலு, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பெருநகர சென்னை மாநகராட்சி துணைமேயர் மு .மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

அந்த விளையாட்டு திடலில் கேரம்போர்டு, கிரிக்கெட்,கபடி, சிலம்பம் ஆகிய விளையாட்டை பார்வையிட்டனர் .
மேலும் நிகழ்ச்சியில் தி. நகர் மேற்கு பகுதி செயலாளர் கே .ஏழுமலை,வட்டச் செயலாளர் தட்சன் ஹரிஹரன்,130 வார்டு மாமன்ற உறுப்பினர் பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது :- கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இல்லாத இந்த 9 கிரவுண்ட் பூங்கா தற்போது தியாகராய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டுள்ளது. இதில் கேரம்போர்டு,சிலம்பம், கிரிக்கெட், கபடி விளையாட்டுப் பயிற்சியை செய்ததற்கு வசதியாக தனித்தனி திடலை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது . மேலும் இப்பகுதி மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு வசதியாக நடைப்பயிற்சி பாதை மற்றும் சிறுவர் விளையாட்டுத்திடல், அமைக்கப்பட்டுள்ளது என்றார் .

About admin

Check Also

SRILA CHATTERJEE BRINGS AFFORDABLE ART TO CHENNAI

Dates: 6th to 8th March Time: 11 am – 7 pm Venue: The Folly at …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat