செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின்நிறுவனர் டாக்டர் எலிசபெத் தாமஸ் அவர்களின் 90 ஆவதுபிறந்தநாள் நிகழ்வு 17.4.2025 அன்று கவியரங்கமாகக்கொண்டாடப்பட்டது. பெண் ஆளுமைகளுள் சிறந்து விளங்கியடாக்டர் எலிசபெத் அம்மையாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில்”பெண் மொழி” என்னும் தலைப்பில் 30க்கும் மேற்பட்டமாணவிகள் கவிதைகளைப் படித்து அம்மையாரைப் போற்றினர். பெண்கள் தன்னம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்த நிறுவனரைக்கவிதைகளால் பெருமைப் படுத்தினர்.
நமது முன்னோர்களைப் போற்றும் பண்பாட்டை அடுத்தஇளைய தலை முறையினருக்கு உருவாக்கும் நோக்கில்இந்நிகழ்வு நடத்தப்பட்டது . தமிழ்த் துறை இதனைத்தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது. சிறந்த ஆளுமைதிறன் மிக்க எலிசபெத் அம்மையாரின் கல்விப் பணியைமாணவிகள் அறிந்து கொண்டு முத்தாய்ப்பான கவிதைகளைவாசித்தனர். இக்கவியரங்கத்தில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் குயின்சி ஆஷா தாஸ் அவர்களும் நூலகர் முனைவர்சுமுகி பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டனர்.