
செயற்கை நுண்ணறிவு என்னும் AI மக்களிடையேஅதிக அளவில் பழக்கத்தில் உள்ள இன்றையச் சூழலில்மாணவர்களிடையே புதியதாகப் படைக்கும் திறன் குறைந்துவருகிறது. புதியச் சிந்தனைகள், படைப்பாக்கத் திறன்கள்இவையே என்றென்றைக்கும் நிலைத்து நின்றுஉண்மையான மன நிறைவைத் தரும் என்பதைமெய்ப்பிக்கும் வகையில் சி.டி.டி.இ மகளிர் கல்லூரிமாணவிகள் 07.04.2025 அன்று பரதம், வீணை, யோகா, கலைகளை ஜே.ஜே.கே கலையரங்கில் நிகழ்த்தினர். இந்நிகழ்விற்குத் தமிழ் இசைச் சங்கம் , தமிழிசைக் கல்லூரிமுதல்வர் டாக்டர் வி.வி. மீனாட்சி ஜெயக்குமார் கலந்துகொண்டார். கலைகளைக் கற்கும் போது ஒழுக்கம், அமைதி, கருணை இவைகளை மாணவிகள் கற்றுக் கொள்ள முடியும்.இசைக்கு மொழி என்பது அவசியமில்லை. அத்தைகையஇசையை அனைத்து மாணவிகளும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் பரதக் கலையும் இசைக்கலையும் மனிதனின் வாழ்வை அழகாக்கக் கூடியவைஎன்பதையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரிதாளாளர் திரு. இல. பழமலை (இ.ஆ.ப, ஓய்வு) அவர்களும்கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.ஸ்ரீதேவி அவர்களும்கலந்து கொண்டனர். விழா இனிதே நிறைவுப் பெற்றது.