தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர் சந்திப்பில்
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக யோகா ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதாகவும் இயக்குனரை சந்தேகத்தை கேட்ட பொழுது மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்றால் சொல்லி இருந்ததாகவும் யோகா பயிற்சி ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒன்றரை லட்சம் முதல் ஒரு லட்சம் வரை நிலுவை பாக்கி இருப்பதால் யோகா பயிற்சியாளர்கள் கடும் சிரமத்தில் இருப்பதாகவும்… இந்நிலையில் தமிழக அரசு மையத்திலிருந்து தொலைபேசி குறுஞ்செய்தி வாயிலாக யோகா பயிற்சியாளர்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சித்த மருத்துவர்கள் குறுஞ்செய்தி அனுப்பி இருப்பதாகவும்… அதன் அடிப்படையில் யோகா பயிற்சியாளர்கள் வலுக்கட்டாயமாக பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் கடுமையான மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகி இருப்பதால் தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்…
யுஜிசி அங்கீகாரம் பெறாத மருத்துவ கல்வி என்கின்ற பெயரில் தற்பொழுது 20க்கும் மேற்பட்ட தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் நீட் இல்லாமல் டாக்டர் பட்டம் பெறலாம் என தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு உடனடியாக இதனை தடுத்து நிறுத்தி அப்பாவி மாணவர்களையும் பெற்றோர்களையும் காப்பாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்..
தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத சூழ்நிலையில் தமிழகத்தை சேர்ந்த சில அதிகாரிகள் தங்களது சுயநலனுக்காக தவறான செய்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தங்களை நீக்கம் செய்துவிட்டு தங்களின் பணியிடங்களுக்கு ரூபாய் 9 லட்சம் வரை விலை பேசி விற்பனை செய்யும் நோக்கில் சித்த மருத்துவமனை கல்லூரி முதல்வர் மணவாளன் என்பவர் செயல்பட்டு வருவதாகவும் அவரை பதவி நீக்கம் செய்து பாதிக்கப்பட்ட யோகா ஆசிரியர்களுக்கு தமிழக அரசு காயத்தை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தி உள்ளார்…
தற்காலிக மதிப்பு புதிய பணியிடத்திற்கு பி என் ஓ எஸ் டாக்டர் பட்டம் பெற்றவர்களை யோகா பயிற்சி துறையின் இயக்குனர் மணவாளன் அவர்களின் நடவடிக்கையை தடை செய்து மதுரை கிளை நீதிமன்றம் வழங்கி உள்ள உத்தரவின் படி அதனை தடை செய்ய வேண்டும் என அவர் தமிழக அரசு கேட்டுக் கொண்டார்