விஜய் டிவி ராமர் நடிப்பில் விரைவில் ரிலீஸுக்கு தயாராகும் ‘அது வாங்குனா இது இலவசம்’

ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும் கலையரசன், சூப்பர் குட் சுப்பிரமணி, மாரிஸ் ராஜா, சம்பத், மீசை ரமேஷ், அருண், அம்மையப்பன் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் S.K செந்தில் ராஜன் குறும்படம், விளம்பர படம் மற்றும் இசை ஆல்பங்கள் இயக்கிய அனுபவம் கொண்டவர். அவர் முதன்முதலாக இயக்கும் திரைப்படம் இது.

படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி தப்பு பண்ணினால் தண்டனை ஃபிரீ என்கிற கருத்தை மையமாக வைத்து நகைச்சுவை திரைக்கதையுடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.

இயக்குநர் செந்தில் ராஜன் கூறும்போது, “ஒரு சிலர் செய்யும் தவறுகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். அதனால் என்ன விஷயங்கள் நடக்கின்றன என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. இதுவரை பார்க்காத ஒரு ராமரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படத்திற்குப் பிறகு நிச்சயம் வடிவேலு போல மிகப்பெரிய அளவில் அவர் பேசப்படுவர்” என்றார்.

இந்த படத்திற்கு அர்வின் ராஜ் இசையமைத்துள்ளார் பாடல்களை இயக்குனர் எஸ் கே செந்தில் ராஜனே எழுதியுள்ளார். ஒளிப்பதிவை விக்னேஷ் மலைச்சாமி கவனிக்க,  நாகராஜன்.D படத்தொகுப்பு செய்துள்ளார். நடனத்தை சரவணன் வடிவமைத்துள்ளார்.

ஒரு முழு பாடல் முழுவதும் மழையில் நனைந்தபடி படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல படத்தில் இடம் பெறும் ஒரு ஐட்டம் பாடலை ஒரே நாளில் படமாக்கி இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு சீசன் 10’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகை நமீதா வெளியிட்டார். 

பிப்ரவரி 14 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தை ஆக்சன் ரியாக்சன் நிறுவனம் சார்பில் ஜெனீஷ் தமிழகமெங்கும் வெளியிடுகிறார் .

About admin

Check Also

‘Lakshmikanthan Kolai Vazhkku’ Shoot Wrapped Successfully

The makers of Lakshmikanthan Kolai Vazhkku have successfully completed the entire shooting schedule, marking a …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat