தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணாசாலை, பார்டர் தோட்டம், மோகன் தாஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப ஆகியோர் முன்னிலையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டு, சேப்பாக்கம் பகுதிக்கான சிறப்பு இருசக்கர ரோந்து வாகனங்களின் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்து, காவல் ஆணையருடன் பொதுமக்களை சந்தித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) முனைவர் N.கண்ணன், இ.கா.ப, காவல் இணை ஆணையாளர் (கிழக்கு மண்டலம்) டாக்டர்.P.விஜயகுமார், இ.கா.ப, காவல் துணை ஆணையாளர்கள், V.ஜெயச்சந்திரன், (திருவல்லிக்கேணி) ஹரி கிரண் பிரசாத், இ.கா.ப, (மயிலாப்பூர்), உதவி ஆணையாளர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழு தலைவர் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
