செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர் மன்றங்களுக்கான தொடக்கவிழா.

சென்னை – பெரம்பூர், செவாலியர் டி. தாமஸ்எலிசபெத் மகளிர் கல்லூரியின் 2024-2025 ஆம்கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை மற்றும் மாணவர்மன்றங்களுக்கான தொடக்கவிழா 15-07-2024 அன்றுநடைபெற்றது. மாணவர்களை நேர்மை மற்றும் தெளிவுடன்கூடிய தலைமைத்துவம் பெற்றவர்களாக உருவாக்கும் மாற்றத்திற்கான ஒரு  பயணத்தின் தொடக்கமாக இவ்விழாஅமைந்தது. இவ்விழாவில் சி.டி.டி.இ கல்விஅறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மற்றும் தாளாளர்திரு. இல.பழமலை(இ.ஆ.ப., ஓய்வு) கலந்துக்கொண்டு மாணவர்களிடையே திறமையானதலைமைத்துவத்தின் இன்றியமையாத பண்புகள் குறித்துசிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. ஸ்ரீதேவி மாணவர்கள் தலைமைப்பண்புடையவர்களாகச் செயல்பட்டால்தான் கல்லூரியும்சமூகமும் வளமான எதிர்காலத்தை பெற முடியும் என்ற உறுதிமொழியை வழங்கினார். கல்வியாண்டின் மாணவமுதன்மையர் வேதியியல் துறைத் தலைவர் பேராசிரியர் என்.அனுராதா அவர்கள் கல்லூரியின் அடிப்படைக்கொள்கைகளான மதிப்பு, அறிவு, நுண்திறன், தரம் மற்றும்வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவை குறித்து விளக்கமாகஎடுத்துரைத்தார். விழாவின் தொடக்கமாக கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டுக் குழுவின்(Iqac) இயக்குநர் முதுகலைவணிகவியல் துறைத் தலைவர் முனைவர். எஸ். ஹஜீமா ரபியத்பீவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மாணவர்பேரவையின் தலைவி ஏ. ஜே. தாரிகா ஸ்ரீ அவர்களின்நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது,  

About admin

Check Also

CTTE College Conducts 36th Graduation Day, Emphasizing Holistic Education and Women Empowerment. 

Chevalier T. Thomas Elizabeth College for Women, Perambur, held the 36th Graduation Day Ceremony for …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat