சி.டி.டி.இ. கல்லூரியில் சுய தொழில் சிந்தனை விதைப்பு மற்றும் நவின உலகிற்குத் தேவையானத் திறன் வளர்ப்புப் பயிற்சி!!

தற்கால நவீன உலகில் நிறைந்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மாணவியருக்கு  ஆக்கப்பூர்வமான சுயதொழில் சிந்தனைகளை விதைக்கவும்  இன்றைய உலகிற்குத் தேவையான திறன்களை வளர்க்கவும் உதவும் பயிற்சி,    ‘சி.டி.டி.இ. பசார் 2 24’  என்னும் பொருண்மையில்,   சென்னை, பெரம்பூரில் உள்ள  செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியில் 10.07.2024 அன்று நடைபெற்றது. 

பல்துறை மாணவியரும்,  கல்லூரி வளாகத்தில் ஒரு தொடர்விற்பனை நிலையங்கள் அமைத்து, பலவகையான கைவினை பொருட்கள், கலைபொருட்கள்,  நவீன ஆபரணங்கள்,  உணவுப்பொருட்கள், மற்றும்விளையாட்டுகள் போன்றவற்றை காட்சிப்படுத்திக்  காண்போரை  வியக்கச் செய்தனர். இந்த முழு அனுபவமும்மாணவியருக்குத் தன்னம்பிக்கையை  வளர்த்ததோடு சூழலை உணர்ந்து செயல்படும் ஆற்றலையும் பெற உதவியது.  மேலும்,  சக மாணவியரின் உற்சாகமான வரவேற்பும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பும் அவர்களின்முயற்சிகளுக்கான வெற்றியை உறுதிபடுத்துவதாக அமைந்தது.  இது போன்ற புதிய வாய்ப்புகள் மாணவர்களுக்கு, ஆக்கப்பூர்வ முயற்சிகளின் மீதான ஈடுபாட்டினை ஏற்படுத்துவதோடு சமுகத் தேவையினை நிறைவு செய்யும் செயல்களை மேற்கொள்ளவும் ஊக்கப்படுத்துகின்றது. இவ்வாறானச் சிறந்த முன்னெடுப்புகளுக்குத் தொடர்ந்து உறுதுணையாக நின்று,  தகுதியும் ஆற்றலும் வாய்ந்த மாணவ சமுதாயத்தினை எதிர்காலத்திற்கு  விதைத்து  கல்லூரி தன் அர்ப்பணிப்பினை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

About admin

Check Also

CTTE College Conducts 36th Graduation Day, Emphasizing Holistic Education and Women Empowerment. 

Chevalier T. Thomas Elizabeth College for Women, Perambur, held the 36th Graduation Day Ceremony for …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat