சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலக அரங்கில் ஹேர்ஸ்டோரீஸ்சின் 13 நூல்களை கூடுதல் காவல் துறை தலைமை இயக்குனர் வனிதா ஐபிஎஸ் வெளியிட ஸ்ரீதேவி ஹென்றி பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய வனிதா ஐபிஎஸ் ஒரே நேரத்தில் இத்தனை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மகளிர் சமூகத்தில் தங்களை எப்போதும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வருகின்றனர். இதுபோன்று நூல்கள் மூலம் சமூகத்திற்கு தேவையான செயல்களை பெண்கள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். எழுத்தாளர் கனலி(எ) சுப்பு எழுதிய மூன்றாவது புத்தகமான இளமை திரும்புதே நூலையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் 13 பெண் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியினை
ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத் நிவேதிதா லூயிஸ் மற்றும் பதிப்பகத்தார் ஏற்பாடு செய்து இருந்தனர்.
Check Also
Bala Rang Tarang ka Indradhanush – An Enchanting Evening of Art, Rhythm, and Splendour
Chennai, March 2025: Bala Vidya Mandir Senior Secondary School, Adyar, hosted a spectacular cultural extravaganza. …