விவசாயிகளின் துயர் துடைக்கும் நண்பன் அறக்கட்டளையின் நண்பன் mothers for mother Nature (MFMN)

நண்பன் அறகட்டளையின் mother for Mother Nature இயற்கை விவசாயம் ,  மகளிர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை என்று பல்வேறு துறையில் தனது சேவை எந்த பிரதிபலனும் இன்றி சமூகப்பணியாற்றி வருகிறது.

தற்போது
இந்த நண்பன் mathers for mother Nature, நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குளம்,நாச்சான் குளம், வருசாக்குளம் ஆகிய ஊர்களின் நீர்பாசன குளங்கள், மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி ஆழப்படுத்தும் வேலையை  அமெரிக்க தமிழரான  
நண்பன் குழுமத்தின் இணை நிறுவனர் (Co founder )
நண்பன் சக்திவேல் (USA) 
“நீர்இன்றி அமையாது உலகு” என்ற வள்ளுவனின் கூற்றுக்கு இனங்க தமிழகத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தலைமை ஏற்று
 நடத்துகிறார். இவருடன் நண்பன் பிரீத்தா USA இனைந்து இதனை நண்பன் MFMNயை வழிநடத்தி செல்கின்றார்.

இவர்களுடன் காவேரி டெல்டா பகுதியை சார்ந்த நண்பன்  நிமல் ராகவன்,  தங்ககண்ணன், சித்தார்த்  ஆகியோரும் கைகோர்த்துள்ளனர். 

இந்த நண்பன் MFMN நீர் மேலாண்மை திட்டத்தில்  சுமார் 410 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை தூர்வருவதன் முலம்  600 கோடி லிட்டர் தண்ணியை சேமிக்க முடியும்.  இதனால் சுமார் 12,000 விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவர். மேலும் இந்த குளத்தை தூர்வருவதன் முலம் இந்த  சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, நீர் 40 முதல் 100 அடிக்குள் கிடைக்க வாய்ப்பு ஏற்ப்படும் என்கின்றனர் இந்த அறக்கட்டளை குழுவினர். 

இந்தப் பணியை செய்து முடிக்க இரண்டு மாதம் கால அவகாசம் ஆகும் எனவும் இந்த பணிக்காக புத்தம்புதியதாக ₹37.50 லட்சம் மதிப்புள்ள பொக்லைன் எந்திரத்தை நண்பன் MFMN மக்கள் பயண்பாட்டுக்காக வழங்கியுள்ளது. இந்த 410 ஏக்கர் பரப்பளவுள்ள குளங்களை தூர்வார ஆகும் எரிபொருள் செலவான ₹3 முதல் ₹4 லட்சத்தையும் நண்பன் அறங்கடளை ஏற்க்கும் தெரிவித்தனர். 

நண்பன்  அறக்கட்டளை தன்  சொந்த செலவிலேயே அனைத்து சமூக நலன் சார்ந்த சேவைகளை திறம்பட செய்து வருகின்றது. 

இந்த  நண்பன் அறக்கட்டளை தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் மேலாண்மை திட்டத்தை வழுப்படுத்தும் வகையில் மேலும் 10 புத்தம்புதிய பொக்லைன் எந்திரங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளது. 

இந்த நீர் மேலாண்மை துவக்க விழாவில் தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நண்பன் என்பது எவ்வித பிறதி பலனும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே, அதேபோல் இந்த நண்பன் அறக்கட்டளையின் வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த பலனும் எதிர்பார்க்காமல் இந்த ₹37.5லட்சம் மதிப்புள்ள புத்தம்புதிய பொக்லைன் எந்திரம் வழங்கி நீர் மேலாண்மைக்கு உதவுகிறார்கள்.
நீரின் தேவை அறிந்து இவர்கள் செய்யும் உதவி மிகப்பெரியது. இந்த அறக்கட்டளை மேலும் வளர வேண்டும், இவர்கள் சமூகப் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்தினார்.

குழந்தைக்கு எப்படி தாய்ப்பால் முக்கியமோ அதே போல் மனித குலத்திற்கு நீரின் தேவை முக்கியம், அதை பாதுகாக்க வேண்டியது மற்றும் சுகாதாரமாக வைத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் இந்த விழாவில் கலந்து கொண்ட கோட்டாச்சி தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய் ஆய்வாளர்  மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த நண்பன் அறகட்டளையின் MFMN திட்டத்தை வழி நடத்திசெல்லும் நண்பன் சக்திவேல் ,நண்பன் பிரீத்தா குழுவினரின் சேவையை உளமாற பாராட்டினர்.

நண்பன் அறக்கட்டளை ஏற்பாடு செய்த இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் நண்பன் அறக்கட்டளையின் நண்பன் வேல்காந்த் வரவேற்று நன்றி கூறினார்.

மேலும் தங்கள் பகுதியில் ஏதேனும் நீர் மேலாண்மை உதவி தேவைப்பட்டால் கீழ்க்கண்ட தொலைபேசி எண் மற்றும் இணையதள முகவரியில் தொடர்பு பொள்ளவும். 

Mail id: [email protected]
Contact: 9962200666.

About admin

Check Also

Trust in Every Click: Amazon’s Multi-Layered Approach to Combating E-commerce Fraud

Chennai :  In the bustling marketplace of India the rise of fraud and abuse is fast emerging …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat