வருங்காலத்தில் ஆளப்போகும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ராஜா ராணிகள் தான்  

வருங்காலத்தில் ஆளப்போகும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ராஜா ராணிகள் தான் அவர்களை காக்கும் கல்வித்துறையின் சிப்பாய் தான் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி என சர்வதேச சதுரங்க போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பேச்சு.

சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கே.சி.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 27 ஆம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அவர்களால் சர்வதேச சதுரங்க போட்டி துவங்கி வைக்கப்பட்டது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, அந்தமான் நிக்கோபர், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுமார் 356 பேர் கலந்து கொண்டு தங்களது விளையாடினர்.

இப்போட்டியில் முதல் இடம் பிடித்த தமிழ்நாட்டை சேர்ந்த 21-வயதான ஹிர்த்திகேஷூக்கு ரூபாய் 25,000 ரொக்கப்பணம் மற்றும் கோப்பையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

அதேபோல் இரண்டாம் இடத்தை காரைக்குடியை சேர்ந்த 20-வயது கண்ணனுக்கு ரூபாய் 20,000 ரொக்கப்பணமும், மூன்றாம் இடம் பிடித்த பத்ரிநாராயணனுக்கு ரூபாய் 15,000 ரொக்கப்பணம் உள்ளிட்ட 54-நபர்களுக்கு ரூபாய் 20,3000 ஊக்கத்தொகையை அமைச்சர் வழங்கினார்.

8-வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் கலந்துகொண்ட தேசிய அளவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரை சேர்ந்த ஷர்வானிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி :-

சதுரங்க விளையாட்டில் ராஜா ராணியை காக்க சிப்பாய்கள் இருப்பார்கள், அதைப்போல வருங்காலத்தில் ஆளப்போகும் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் ராஜா ராணிக்கள், அவர்களை பள்ளி கல்வித்துறையில் காக்கும் சிப்பாய் தான் இந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்றார்.

மேலும் 44 வது சதுரங்க ஒலிம்பிக் போட்டியை நடத்த உலகம் நாடுகள் போட்டிக் கொண்டிருந்த நிலையில் அதை தமிழகத்தில் கொண்டு வந்த பெருமை முதல்வரை சாரும்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாணவ மாணவிகளிடையே செஸ் போட்டியை நடைத்தி அதில் வெற்றி பெருபவர்களை மகாபலிபுத்தில் நடைபெறயிருக்கும் செஸ் ஒலிம்பிக் போட்டியை காண வைத்து, அந்த விளையாட்டு வீரார்களுடன் கலந்துரையாட வைக்க உள்ளோம்.

About admin

Check Also

கல்லூரி நிறுவனரின் பிறந்த நாளைக் கவிதைகள் படைத்துக்கொண்டாடிய வடசென்னை மாணவிகள்!

செவாலியர் டி. தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரியின்நிறுவனர் டாக்டர் எலிசபெத் தாமஸ் அவர்களின் 90 ஆவதுபிறந்தநாள் நிகழ்வு 17.4.2025 அன்று கவியரங்கமாகக்கொண்டாடப்பட்டது. பெண் ஆளுமைகளுள் சிறந்து விளங்கியடாக்டர் எலிசபெத் அம்மையாரின்  பிறந்தநாள் நிகழ்ச்சியில்”பெண் மொழி” என்னும் தலைப்பில்  30க்கும் மேற்பட்டமாணவிகள் கவிதைகளைப் படித்து அம்மையாரைப் போற்றினர். பெண்கள் தன்னம்பிக்கையின் வடிவமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்த நிறுவனரைக்கவிதைகளால் பெருமைப் படுத்தினர்.  நமது முன்னோர்களைப் போற்றும் பண்பாட்டை அடுத்தஇளைய தலை முறையினருக்கு உருவாக்கும் நோக்கில்இந்நிகழ்வு நடத்தப்பட்டது . தமிழ்த் துறை இதனைத்தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது. சிறந்த ஆளுமைதிறன் மிக்க எலிசபெத் அம்மையாரின் கல்விப் பணியைமாணவிகள் அறிந்து கொண்டு முத்தாய்ப்பான கவிதைகளைவாசித்தனர். இக்கவியரங்கத்தில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் குயின்சி ஆஷா தாஸ் அவர்களும் நூலகர் முனைவர்சுமுகி பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat