Cheapest 7 Seater Cars under Rs. 6 Lakhs

[ad_1]

இந்தியாவில் 6 லட்சம் ரூபாய்க்குள் 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பங்களுக்கு பெரிய கார் தேவைப்படுகிறது. ஆனால் சந்தையில் குறைந்த விலையில் பெரிய கார்கள் கிடைக்குமா? பதில் ஆம் என்பதுதான். குறைந்த பட்ஜெட்டில் 7 இருக்கைகள் கொண்ட கார்கள் சந்தையில் கிடைக்கின்றன.

6 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் 7 இருக்கைகள் கொண்ட காரை வாங்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், அத்தகைய கார்களைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

டேட்சண் கோ+

டேட்சன் கோ+ -ன் விலை ரூ 4.26 லட்சத்தில் தொடங்குகிறது. இருப்பினும், மாடலைப் பொறுத்து, விலை ரூ.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இதன் விலை செல்லக்கூடும். கோ+ 7 வகைகளில் கிடைக்கிறது. இது 7 இருக்கைகள் கொண்ட கார் ஆகும். இது ஒரு பெட்ரோல் எஞ்சின் கார். இது 1198 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. இதனுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் டிரான்ஸ்மிஷன் (சிவிடி) விருப்பங்கள் உள்ளன. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.57 முதல் 19.02 கிமீ வரை இருக்கும்.

ரெனால்ட் ட்ரைபர்

ரெனால்ட் ட்ரைபரின் விலை ரூ.5.88 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மாடலைப் பொறுத்து, காரின் விலை ரூ.8.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உயர்கிறது. ரெனால்ட் ட்ரைபர் 10 வகைகளில் கிடைக்கிறது. இதுவும் 7 இருக்கைகள் கொண்ட கார் ஆகும்.

இது ஒரு பெட்ரோல் எஞ்சின் கார் ஆகும். இது 999 சிசி இன்ஜினைப் பெற்றுள்ளது. இதனுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமெடில் (ஏஎம்டி) டிரான்ஸ்மிஷன் விருப்பங்கள் உள்ளன. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.29 முதல் 19 கிமீ வரை இருக்கும்.

மாருதி சுசுகி ஈகோ

மாருதி சுசுகி ஈகோவின் விலை ரூ.4.63 லட்சத்தில் தொடங்குகிறது. இது மாடலைப் பொறுத்து ரூ.7.63 லட்சம் வரை செல்கிறது. மாருதி சுசுகி ஈகோ 5 வகைகளில் வருகிறது. இதில் 1196 சிசி பெட்ரோல் எஞ்சின் உள்ளது. நிறுவனம் அதன் சிஎன்ஜி பதிப்பையும் விற்பனை செய்கிறது.

இது 5 இருக்கைகள் மற்றும் 7 இருக்கைகள் இரண்டு வகையிலும் கிடைக்கிறது. இது மானுவல் முறையில் மட்டும் கிடைக்கிறது. இது 16.11 முதல் 20.88 வரை மைலேஜ் தரக்கூடியது.

Source link

About

Check Also

Top-5 Waterproof Smartphones in India | Waterproof Smartphones

[ad_1] மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஸ்மாரட்போன் வைத்திருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சிறிய கவனக்குறைவும் விலை உயர்ந்த ஸ்மார்போனை பழுதாக்கிவிடும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat