IPhone And Android Phones With 76% Discount On Flipkart

[ad_1]

வால்மார்ட்டுக்குச் சொந்தமாகவுள்ள இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் ஷாப்பிங் தளம் தற்போது  புதுப்பிக்கப்பட்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு 76% வரை தள்ளுபடி வழங்குகிறது.  சிறந்த போன்களை ஆன்லைனில் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ப்ளிப்கார்ட் ஆப்பிள், எம்ஐ  மற்றும் கூகுள் போன்றவற்றின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிகளவிலான தள்ளுபடிகளை வழங்குகிறது.  

மேலும் படிக்க | ஐபோனின் 13 மாடல் போன் உற்பத்தி சென்னை ஃபாக்ஸ்கான் ஆலையில் தொடங்கியது

இவ்வளவு தள்ளுபடியில் கிடைக்கும் இத்தகைய புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சில வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும், இது அவர்களுக்கு சொந்தமாக முன்னாள் இருந்தது என்பதையும் வாடிக்கையாளர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.  இருப்பினும் இந்தவகை போன்கள் குறைந்தது மூன்று அல்லது ஆறு மாத கேரன்டியுடன் தான் விற்பனைக்கு வருகின்றன, அதனால் போன்கள் நல்ல நிலையில் இருக்கும் என்பது உறுதியாகிறது.  தற்போது தள்ளுபடி விலையில் ப்ளிப்கார்ட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியலை இங்கே காண்போம். 

ஆப்பிள் ஐபோன் 7 :

ப்ளிப்கார்ட் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 7 (கருப்பு, 32 ஜிபி) 76% தள்ளுபடியில் ரூ.14,499க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  இந்தவகை ஸ்மார்ட்போன் 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.  மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஏ10 ஃப்யூஷன் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

iphone

கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் :

ப்ளிப்கார்ட் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட கூகுள் பிக்சல் 3 எக்ஸ்எல் (64ஜிபி)  ரூ.13,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்தவகை ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜிபி ரேம் உடன் இணைந்து ஸ்னாப்டிராகன் 845 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.  மேலும் இது இரட்டை 8எம்பி செல்ஃபி லென்ஸ்கள் மற்றும் 12.2எம்பி பின்புற கேமராவுடன் வருகிறது. 

ஆப்பிள் ஐபோன் 6 எஸ் :

ப்ளிப்கார்ட் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 6 எஸ் (32ஜிபி) ரூ11,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இந்தவகை ஸ்மார்ட்போன் 4.7 இன்ச் ரெட்டினா ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் வருகிறது.  மேலும் இது 12எம்பி பின்புற கேமரா மற்றும் 5எம்பி முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. 

எம்ஐ ரெட்மி நோட் 6 ப்ரோ :

ப்ளிப்கார்ட் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எம்ஐ ரெட்மி நோட் 6 ப்ரோ ரூ.7,199க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தவகை ஸ்மார்ட்போன் 6.26 இன்ச் முழு ஹெச்டி + டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 4000 எம்ஏஹெச்  பேட்டரியை கொண்டுள்ளது.  மேலும் இதன் பின்புறத்தில்12எம்பி + 5எம்பி இரட்டை கேமராவும்,  முன்புறத்தில் 20எம்பி + 2எம்பி இரட்டை கேமராவையும் கொண்டுள்ளது.

redmi

மேலும் படிக்க | புதிய iPhone SE 3-ஐ 28,900 ரூபாய்க்கு வாங்க அறிய வாய்ப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]
Source link

About

Check Also

Top-5 Waterproof Smartphones in India | Waterproof Smartphones

[ad_1] மழைக்காலம் தொடங்கிவிட்டதால் ஸ்மாரட்போன் வைத்திருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சிறிய கவனக்குறைவும் விலை உயர்ந்த ஸ்மார்போனை பழுதாக்கிவிடும். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat