சென்னை, ஜூன் 2024: சிந்தனை, அறிவியல் ஆய்வு மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து மொத்தம் 28 மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (CSIR) கோடைகால பயிற்சிக்கான வாய்ப்பை பெற்றுள்ளனர். CSIR ஜிக்யாசா EPIC ஹேக்கத்தான் 2024-ல் மாணவர்கள் சிறப்பாக திட்டங்களை சமர்ப்பித்ததன் விளைவாக இந்தப் பயிற்சிக்கான வாய்ப்பு கிடைத்துள்ளன. நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக சமர்ப்பிக்கப்பட்ட 960 திட்டங்களில், 7-9 வகை பிரிவில் 42 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் ஆர்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியிலிருந்து 14 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. சுமார் 28 மாணவர்கள், ஒன் ஹெல்த் மற்றும் க்ளீன் அண்ட் கிரீன் எனர்ஜி என்ற இரண்டு குழுவை உருவாக்கி, பள்ளியின் கல்வித் துறையின் வழிகாட்டல் மற்றும் பராமரிப்பின் கீழ் 14 வெவ்வேறு திட்டங்களில் மாணவர்கள் பணியாற்றியுள்ளனர்.
ருத்ராஷ் தூடிகா, விவான் விவேக்நாத், மற்றும் எதன் பாண்டே ஆகியோர் துரைப்பாக்கம் கிளையிலிருந்து பயிற்சிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது ஜூலை 2024 முதல் ஹைப்ரிட் முறையில் இரண்டு மாத பயிற்சியாக இருக்கும்.
CSIR, பள்ளி மாணவர்களுக்கான அதன் முதன்மையான சிஎஸ்ஐஆர்-CSIR பிரச்சார திட்டத்தின் கீழ் “எம்பவரிங் பியூபில் இனோவேஷன் அண்ட் கிரியேட்டிவிட்டி (EPIC)” முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே ஆர்வம், புதுமை மற்றும் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதற்காக EPIC வடிவமைக்கப்பட்டுள்ளது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தேசிய சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு வலுவூட்டுகிறது. CSIR ஜிக்யாசா EPIC ஹேக்கத்தான் 2024, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகப் பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்குவதற்கான தளத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது.