எதிர்கால பொறியியல் தலைவர்களை அங்கீகரிப்பதற்காக IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதி

பெங்களூரு, 16.04.2024 – பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IET), மதிப்புமிக்க IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதின் எட்டாவது பதிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது, இதன் முழு பரிசுத் தொகை ரூ 10 லட்சம். அனைத்து AICTE/UGC-அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மாணவர்களுக்காக இது திறக்கப்பட்டுள்ளது, இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியியல் மாணவர்களிடையே தனிச் சிறப்பையும் கண்டுபிடிப்புகளையும் வெகுமதி அளித்து கொண்டாடுவதே IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்கு முந்தைய வெற்றியாளர்கள் கூகிள், ஆப்பிள், போயிங், டெலாய்ட் மற்றும் எம்.ஐ.டி போன்ற தொழில்துறை முன்னோடிகளுடன் இணைந்துள்ளனர், மேலும் சிலர் தொழில்முனைவோராகவும் மாறியுள்ளனர்.
இந்த விருது, பங்கேற்பாளர்களை அவர்களது கல்வித்திறன், பிறதுறைச் செயற்பாடுகள், வெளிக்கள செயல்பாடுகளில் அவர்கள் எட்டிய தூரம் மற்றும் சமூக சவால்களுக்கு தீர்வாக ஆக்கப்பூர்வமான பொறியியல் தீர்வுகளைக் கொண்டு வருவதில் அவர்களது திறன் போன்ற அனைத்தும் அளவீடுகள் கொண்டு மதிப்பீடு செய்கிறது. முதல் சுற்றில், மாணவர்கள் அவர்களின் கல்வித்திறன் மற்றும் பிறதுறைச் செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர் அவர்கள் STEM பாடங்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் பற்றிய ஆன்லைன் தேர்வுக்கு முன்னேறுவார்கள். கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெறக்கூடிய மாணவர்கள், மண்டல சுற்றுகளில் சமூக சவாலுக்கு ஏற்ற தங்கள் தொழில்நுட்பத் தீர்வை முன்வைக்க அழைக்கப்படுவார்கள். மண்டல வெற்றியாளர்கள் இறுதியாக விருதை வெல்வதற்காக தேசிய இறுதிப் போட்டியில் போட்டியிடுவார்கள்.
IET இந்தியாவின் இயக்குநரும், குழுத் தலைவருமான சேகர் சன்யால் பேசுகையில்: தொழில்நுட்பம் நமது உலகில் தொடர்ந்து புரட்சியை செய்து வருவதால், அடுத்த தலைமுறை பொறியியல் தலைவர்களை வளர்ப்பதும் அங்கீகரிப்பதும் மிகவும் அவசியமாகிறது. IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது என்பது பொறியியல் திறமைகளைக் கொண்டாடுவதற்கும் ஆதரவளிப்பதற்கும் நமது வழிமுறையாகும். கடந்த ஆண்டு விண்ணப்பங்கள் அபூர்வமான திறமைகளை பெருமைப்படுத்தின, மேலும் இந்த ஆண்டும் அதில் மாறுபாடு இருக்காது என்று நான் நம்புகிறேன். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் அவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகள் உயிர்ப்பிக்கப்படுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது 2024, முக்கிய கல்வியாளர்கள் மற்றும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கார்ப்பரேட் தலைவர்களைக் கொண்ட மதிப்பிற்குரிய ஆலோசனைக் குழுவால் வழிநடத்தப்படுகிறது. இந்த குழுவிற்கு கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அபிஜித் சக்ரபர்தி தலைமை வகிக்கிறார்.
IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது ஆலோசனைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அபிஜித் சக்ரபர்தி பேசுகையில், “IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது 2024-ன் தொடக்க விழாவைப்பற்றி அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எட்டாவது விருது நிகழ்வில் இந்திய பொறியியல் சமூகத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய இளம் உள்ளங்களுடன் செயல்பட நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்களது கடந்தகால வெற்றியாளர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளனர், மேலும் அவர்களின் சாதனைகளில் நாங்கள் பெருமையடைகிறோம். IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதுடன் கூடிய சிறந்த பாரம்பரியத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இளங்கலை பொறியியல் மாணவர்கள் இந்த ஆண்டு கொண்டு வரும் புதுமையான கண்டுபிடிப்புளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்று கூறினார்
IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருதின் கடந்த ஏழு நிகழ்வுகள் இந்தியா முழுவதிலும் இருந்து மகத்தான பங்கேற்பை பெற்றுள்ளது, கடந்த முறை 43,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. 2013 இல் நிறுவப்பட்ட, வருடாந்திர IET இந்தியா ஸ்காலர்ஷிப் விருது, இந்தியாவின் பொறியியல் சமூகத்திற்கான IET-ன் அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது. இந்தத் திட்டம், அடுத்தப் பொறியாளர்களின் பணியிடத்தில் இருந்து புதுமையான சிந்தனைக்கு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இந்தியாவில் பொறியியலின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் IET இன் பல முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டமானது, வளர்ந்து வரும் பொறியாளர்களின் உழைப்பில் உருவாகும் புதுமையான சிந்தனைக்கு வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் இது இந்தியாவில் பொறியியலின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் IET-ன் பல முயற்சிகளின் ஒரு பகுதியாகும்..
2024 பதிப்பிற்கான விண்ணப்பங்கள் இப்போது வரவேற்கப்படுகின்றன. மேலும் தகவலுக்கு- https://bit.ly/3TSwZYf பார்வையிடவும்

About admin

Check Also

KYNHOOD APPOINTS LAVINA RODRIGUESAS ASSISTANT VICE PRESIDENT – BRAND COMMUNICATIONS

Chennai, February 20th, 2025: KYN, (Know Your Neighbourhood), a leading neighbourhood discovery and connectivity app, by KYNHOOD technologies has appointed …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat